sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!

/

நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!

நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!

நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!


PUBLISHED ON : செப் 29, 2024

Google News

PUBLISHED ON : செப் 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவராத்திரி பூஜை படையல்களில் தவறாமல் இடம் பெறும் உணவு அயிட்டம், சுண்டல். அங்கு மட்டும் அல்ல, பல கோவில் பிரசாதங்களில் இடம் பெறுவதும், கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் தான். அதன் மகிமை தெரிந்து தான், நம் முன்னோர் அதை பயன்படுத்தி வந்துள்ளனர்.

துருக்கியை தாயகமாக கொண்டது, கருப்பு கொண்டைக் கடலை. இதன் விளைச்சலில், இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. 'சைசர் ஏரோட்டினம்' என்பது, இதன் தாவரப் பெயர். அதிக புரதம் நிறைந்தது. அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்தது.

சுண்டல் என்றாலே, பொதுவாக, கருப்பு கொண்டைக் கடலையைத்தான் கூறுவர். உறுதியாகவும் இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் உப்பு சேர்த்தோ, வேக வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.

நம் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கவும், ஹார்மோன் மற்றும் அமினோ அமிலங்கள் உருவாகவும், நரம்புகள் இயக்கத்திற்கும், வைட்டமின் பி6 தேவை. இதன் குறைவால் ரத்த சோகை, மன நல பாதிப்பு மற்றும் அல்சைமர் போன்றவை ஏற்படுகிறது. இது, சுண்டலில் அதிகம் உள்ளது.

சோடியம், செலினியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகளும் உள்ளன.

கருப்பு கொண்டைக் கடலையில், போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும், மெக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது, மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கிறது.

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பைட்டோ நியூட்ரியன், ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், ரத்த கட்டிகள் உருவாவதையும் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது.

கருப்பு கொண்டைக் கடலையில் உள்ள இரும்புச்சத்து, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு அதிக நன்மைகளை தருகிறது. இதை சாப்பிட்டு வர, பெண்களின் முகம் பளபளப்பாகும். சரும பிரச்னைகளை தடுக்கவும், இயற்கையான முறையில் சரும பொலிவை அதிகரிக்கவும், தினமும் சாப்பிட்டு வரலாம்.

சிறுநீர் பெருக்கியாக செயல்படும் பண்பு இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கருப்புக் கொண்டைக்கடலை வேகவைத்த சுடுநீருக்கு உள்ளது.

தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின்களும், தாதுக்களும் இதில் அதிக அளவில் உள்ளன. மேலும், இதில் உள்ள புரதம், தலைமுடியின் வேர்க்கால்களை வலுவாக வைத்து, முடி உதிர்வை தடுக்கிறது. இதை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் நரை முடியையும் தடுக்கலாம்.

குழந்தைகளுக்கு சிறு வயது முதலே தினமும், ஒரு கைப்பிடி அளவாவது கொண்டைக் கடலையை சாப்பிடக் கொடுப்பது, ரத்த சோகை வராமல் தடுக்கும். அவர்களுடைய தசை வளர்ச்சியும் மேம்படும்.

காலையில் எழுந்தவுடன் ஒரு கைப்பிடி அளவு ஊற வைத்த கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிட்டால், நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படலாம்.

- ஞானதேவராஜ்






      Dinamalar
      Follow us