PUBLISHED ON : பிப் 22, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. உருளைக்கிழங்கில் மிக அதிகம் அடங்கியுள்ள சத்து எது?
2. டெசிரி, ஸ்புன்டா, லியன்னா ஆகியவை யாவை?
3. அதிக ரத்த அழுத்தம் கொண்டவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லது, ஏன்?
4. உருளைக்கிழங்கை முகத்தில் தேய்த்துக் கொள்வதால், என்ன பயன்?
5. மஞ்சள், சிவப்பு, பழுப்பு இவற்றை தவிர, வேறெந்த நிறத்தில் உருளைக்கிழங்கு காணப்படுகிறது?
விடை:
1. ஸ்டார்ச் - மாவுச்சத்தின் ஒரு வகை.
2. உருளைக்கிழங்கின் சில வகைகள்.
3. உருளைக்கிழங்கில் சோடியம் குறைவு. அதிலுள்ள பொட்டாஷியம் மற்றும் மக்னீஷியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
4. முகம் பளபளப்பாகும்; சுருக்கங்கள் விழாது.
5. அழுத்தமான நீல நிறத்தில் காணப்படுகிறது. தென் அமெரிக்காவில் விளைகின்றன இந்த உருளைக் கிழங்குகள்.

