
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரள மாநிலம், ஆலப்புழா தெருக்களில், மனோஜ்குமார் என்பவர், ஸ்கூட்டர் சைக்கிளை ஓட்டிச் செல்வதை பார்க்கலாம். சைக்கிளை ஸ்கூட்டருடன் இணைத்து இப்படி ஒரு வாகனத்தை வடிவமைத்து இருக்கிறார். 
ஒருநாள் காயலான் கடைக்கு சென்றபோது, அங்கே பழைய ஸ்கூட்டரின் முன் பகுதி கிடப்பதை கண்டார். அதை இலவசமாக பெற்று, ஸ்கூட்டர் சைக்கிளாக உருவாக்கி இருக்கிறார். ஸ்கூட்டர் சைக்கிளில் பயணிக்க ஹெல்மெட், லைசென்ஸ், ஆர்.சி., புக் மற்றும் இன்ஷூரன்ஸ் போன்ற எந்த சான்றும் தேவை இல்லை; வண்டி ஓட்டி செல்லும் இவரை போலீசாரும் தடுப்பதில்லை. 
— ஜோல்னாபையன்

