
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென் அமெரிக்காவில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு குட்டி தீவு, பாம்புத்தீவு என, அழைக்கப்படுகிறது. 45 கி.மீ., பரப்பளவில் இருக்கும் இந்த தீவு முழுக்க, விஷ பாம்புகள் தான் இருக்கின்றன. இதனால், மனிதர்கள் அங்கு வாழ சாத்தியமில்லை. இதையெல்லாம் அழிப்பது மிகவும் சிரமம். இதற்கு அமெரிக்கா கண்டுபிடித்த யுத்தி தான், வித்தியாசமாக இருக்கிறது.
இறந்த எலிகள் உடம்பில், பாம்புகளை கொல்லும் மாத்திரைகளை கட்டி வைத்து, தீவு முழுவதும் போட்டு விடுவர். அந்த மாத்திரையுடன், எலியை சாப்பிட்டு, செத்து விழுகின்றன, பாம்புகள்.
ஆனால், இதில் ஒரு தீங்கும் இருக்கிறது. அதாவது, இறந்த பாம்புகளை சாப்பிடும் பறவைகளும் செத்து விடுகின்றன. எனவே, அடுத்தது என்ன செய்யலாம் என, யோசனையில் உள்ளனர்.
— ஜோல்னாபையன்