
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரளாவில், ஆலப்புழா அருகே உள்ள அம்பலப்புழை, கிருஷ்ணன் கோவிலில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார், கிருஷ்ணன். இவருக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்தால், நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இங்கு, ஒரு லிட்டர் பாலில், 2.5 கிலோ சர்க்கரை கலந்து, பாலை சுண்ட காட்சி பால் பாயசம் தயாரிக்கின்றனர்.
நாகர்கோவில் பகுதியில், வடசேரி என்ற ஊருக்கு அருகில், கிருஷ்ணன் கோவில் என்ற திருத்தலம் உள்ளது. இங்கே குழந்தை வடிவில், கோவில் கொண்டுள்ளார், ஸ்ரீ கிருஷ்ணர்.
இரவு நேரத்தில் அர்த்த ஜாம பூஜை முடிந்ததும், ஒரு தொட்டிலில் பட்டு துணியை விரித்து, உற்சவ விக்ரஹத்தை படுக்க வைத்து, தாலாட்டு பாடி, பால் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்கின்றனர்.