PUBLISHED ON : பிப் 02, 2025

கின்னஸ் உலக சாதனையாக, உலகின் மிகப்பெரிய அளவிலான, 300 கிலோ தங்கக் கட்டி, ஐக்கிய அரசு எமிரேட்சின் துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
துபாயில், தங்கத்துக்கு பிரத்யேகமான மற்றும் புகழ்பெற்ற இடமாக சிறந்து விளங்கும், 'துபாய் கோல்ட் சூக்' என்ற பகுதியில், இந்த தங்கக்கட்டி பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், ஜப்பானில், 250 கிலோ தங்கக் கட்டி தான், உலகின் மிகப்பெரியது என்ற சாதனைக்கு உரியதாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதை தயாரிக்க, 8 முதல் 10 மணி நேரம் ஆகியிருக்கிறது. இதன் மதிப்பு, சுமார், 211 கோடி ரூபாய்.
இந்த, 300 கிலோ தங்கக் கட்டியை, பலரும் கண்டு களித்துள்ளனர். மேலும், கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கட்டியின் அருகே நின்று, பார்வையாளர்கள் ஆர்வமுடன், 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர்.
— ஜோல்னாபையன்