/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சுற்றுலாவுக்கு திட்டமிடுவது எப்படி?
/
சுற்றுலாவுக்கு திட்டமிடுவது எப்படி?
PUBLISHED ON : மே 25, 2025

எங்கே டூர் போகிறோம் என்பதில் துவங்கி, எங்கே தங்கப் போகிறோம், என்னவெல்லாம் வாங்கப் போகிறோம் என்பது வரை, 'பிளான்' போட்டு கிளம்புவோம். அப்படியிருந்தும், முக்கியமான ஏதோ ஒன்றை தவற விட்டிருப்போம். அது, சுற்றுலா செல்லும் மனநிலையையே கெடுத்து விடும். சுற்றுலா செல்ல முடிவு செய்தவுடனே, 'செக்லிஸ்ட்' தயார் செய்யுங்கள். சேப்டி பின்னில் ஆரம்பித்து, பயணத்துக்கு தேவையான அனைத்தையும் பட்டியலிட்டு, சரிபார்த்து செல்லுங்கள்.
உதாரணத்துக்கு சில...
பணம்: என்ன தான், 'டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு' எடுத்துச் சென்றாலும், கையில் கொஞ்சம் பணம் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அந்த பணத்தையும் ஒரே இடத்தில் வைக்காமல், நீங்கள் எடுத்து செல்லும் பைகளில், கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து வைத்துக் கொள்ளலாம். உடன் வருவோரிடமும் ஆளுக்கு கொஞ்சமாகப் பிரித்துக் கொடுத்து வைக்கலாம்.
மருந்து, மாத்திரைகள்: சில பேருக்கு பயணத்தின் போது வாந்தி, தலைச்சுற்றல் ஏற்படும். அதற்கான மருந்துகளை மருத்துவரிடம் வாங்கி வைத்துக் கொள்ளலாம். தலைவலி, உடல்வலிக்கான தைலம் எடுத்துக் கொள்ளுங்கள். தவிர, நீங்கள் வழக்கமாக மாத்திரை சாப்பிடுபவர் என்றால், அவற்றையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ்: மொபைல் போனுக்கு தேவையான, 'சார்ஜர், பவர் பேங்க், இயர்போன்' போன்றவை ரொம்பவே முக்கியம்.
புத்தகம்: படிக்க நினைத்த, படித்து முடிக்காத புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள். படிப்பதற்கு கண்ணாடி பயன்படுத்துபவர் என்றால், அதை மறந்துவிட வேண்டாம்.
டாய்லெட்டரீஸ்: டூத் பிரஷ், டூத் பேஸ்ட், சோப், பேஸ் வாஷ், சன் ஸ்கிரீன், மாய்ஸ்ச்சரைசர், டவல், ஷாம்பூ, கண்டிஷனர், சானிட்டைசர், மாஸ்க் எடுத்து செல்ல மறக்க வேண்டாம். சின்ன சாஷேக்களாக இருந்தால் சுமை குறையும்.
மேக் - அப் பொருட்கள்: முகம் பார்க்கும் கண்ணாடி, பவுடர், பேஸ் கிரீம், பொட்டு, கண் மை, மஸ்காரா, லிப்ஸ்டிக் என, ரெகுலர் மேக்-அப் பொருட்கள்.
இதர பொருட்கள்: தொப்பி, குடை, நெக் பில்லோ, ஸ்கார்ப், ஐ மாஸ்க், போர்வை, டிரஸ் மற்றும் இடங்களுக்கு ஏற்ற காலணிகள், தண்ணீர் பாட்டில், ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்கள், தின்பண்டங்கள், டார்ச் லைட், சின்ன கத்தி, மெழுகுவத்தி, தீப்பெட்டி, பழைய செய்தித் தாள்கள், டிஷ்யூ பேப்பர்.
இவற்றையெல்லாம் பட்டியலிட்டு, 'பேக்' செய்து விட்டு, டிக்கெட்டை நம்பர் ஒன்னாக சேர்த்து விடுங்கள். அதை தேர்வு செய்த பிறகே, மற்ற பொருட்களைச் சரிபார்த்துக் கிளம்புங்கள்.