sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/விஜயதசமி!

விஜயதசமி!

விஜயதசமி!


PUBLISHED ON : அக் 06, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்., 12 - விஜயதசமி

பாண்டவர்கள், காட்டில் மறைந்து வாழ்ந்த காலத்தில், தங்கள் ஆயுதங்களை ஒரு பெரிய வன்னி மரத்தின் அடியிலுள்ள பொந்தினுள் ஒளித்து வைத்திருந்தனர். தங்களின் அஞ்ஞான வாசமான, 12 ஆண்டு காலத்தில், வன்னி மரம் தான் அவர்களது ஆயுதங்களின் பாதுகாப்பு பெட்டகம் ஆனது.

பாண்டவர்கள் மறைந்து வாழும்போது, மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கும், துன்பங்கள் தங்களைத் தாக்காமல் இருக்கவும், என்ன வழி என்று தேடினர். வனத்தில் தவம் செய்யும் பெரும் முனிவர்களை அணுகினர். அவர்களுக்கு, ஸ்ரீதுர்க்கா தேவியின் புகலிடத்தை காட்டினர், அந்த முனிவர்கள்.

துன்பங்களில் இருந்து காப்பவள், துர்க்கை. துர்க்கா தேவியை அண்டியவர் களுக்கு துன்பத்தின் சாயல் கூட நெருங்காது. தாரித்திரியம், துக்கம் மற்றும் பயம் இவற்றைப் போக்கி, உலகுக்கு உபகாரம் செய்பவள், துர்க்கை. இதை, நன்கு அறிந்து, தேவியை வழிபட்டனர், பாண்டவர்கள்.

மகரிஷிகளால் உபதேசிக்கப்பட்ட, 'ஸ்ரீதுர்க்கா நக்ஷத்ர மாலிகா துதி' என்ற, 27 ஸ்லோகங்களை தினமும் துதித்தனர். இதனால், தேவியின் திருவருள் கிடைத்தது. அசுவினி முதல் ரேவதி முடிய உள்ள, 27 நட்சத்திர அதி தேவதைகளும், நட்சத்திரங்களும் இவர்களுக்கு ஆசி கூறி, நன்மைகள் வழங்க தயாராக நின்றன.

அஞ்ஞான வாசம் முடிந்ததும், வன்னி மரப் பொந்தில் இருந்து, தங்கள் ஆயுதங்களை எடுத்து, அம்மரத்தடியில் வைத்து பூஜித்தனர். துர்க்கையாகவும், எல்லா சங்கடங்களையும் சங்கரிப்பவளாகவும், தீமைகளை ஒடுக்கி, நன்மைக்கு வெற்றி தருபவளாகவும் விளங்கும் தேவியை, ஒன்பது நாட்கள் வழிபட்டு, தசமியில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர்.

விஜயம் தரும் தசமி இது என்பதாலும், விஜயனால் மிகவும் பய பக்தியுடன் பூஜிக்கப் பெற்றது என்பதாலும் இது, 'விஜய தசமி' எனப் பெயர் பெற்றது. அதை, விஜய நவராத்திரி என்றும், வன்னி நவராத்திரி என்றும், வன துர்க்கா நவராத்திரி என்றும் அழைப்பது வழக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us