
திரைப்பட விழாவில், சூரி படம்!
விடுதலை படத்தைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடித்து வருகிறார், காமெடியன் சூரி. அடுத்து, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள, கொட்டுக்காளி என்ற படத்திலும், 'ஹீரோ'வாக நடித்துள்ளார்.
இந்த படம், பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
இதன் காரணமாக மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் சூரி, 'ஹீரோவாக நடித்துள்ள இரண்டாவது படத்திற்கே சர்வதேச அங்கீகாரம் கிடைப்பது மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்துள்ளது...' என்கிறார்.
பிரியங்கா மோகனுக்கு, 'ஷாக்' கொடுத்த கிருத்தி ஷெட்டி!
தெலுங்கு, சினிமாவில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும், மும்பை நடிகையான, கிருத்தி ஷெட்டி தமிழில், அழுத்தமாக கால் பதிக்க தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், ஜெயம் ரவி, கார்த்தி படங்கள் மற்றும் வா வாத்தியாரே என்ற படங்களை கைப்பற்றி இருக்கும் அவர், தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும், ஒரு படத்தையும் தட்டி துாக்கி இருக்கிறார்.
இந்த படத்தில், பிரியங்கா மோகன் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், 'கிளாமர்' விவகாரத்தில் அவர், சில நிபந்தனைகளை போட்டதை அடுத்து, இந்த பட வாய்ப்புகளை தன் பக்கம் திருப்பி இருக்கிறார், கிருத்தி ஷெட்டி.
— எலீசா
இரண்டாம் பாகத்தில் இறங்கிய ஷங்கர்!
தற்போது, கமல் நடிப்பில் ஏற்கனவே தான் இயக்கிய, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கும் ஷங்கர், தெலுங்கில், ராம் சரணை வைத்து இயக்கி வரும், கேம் சேஞ்சர் படத்தையும், இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.
இதற்கு முன், தான் இயக்கிய, முதல்வன் மற்றும் அந்நியன் உள்ளிட்ட பல, 'சூப்பர் ஹிட்' படங்களின் இரண்டாம் பாகங்களையும் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் இயக்க திட்டமிட்டுள்ளார், ஷங்கர்.
— சினிமா பொன்னையா
'டாப் ஸ்டார்' படங்களை தட்டி தூக்கும், சாய் பல்லவி!
தமிழில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார், சாய் பல்லவி. அடுத்து தெலுங்கில், நாக சைதன்யாவுடன் நடிப்பவர், ஹிந்தியில், ரன்வீர் கபூர் நடிக்கும் ராமாயணம் என்ற படத்தில், சீதை வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதையடுத்து, இன்னும் சில, 'டாப்' நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கும், தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார், சாய் பல்லவி.
— எலீசா
கறுப்புப்பூனை!
ஐம்பது வயதை கடந்துள்ள, நீலாம்பரி நடிகை, இயக்குனர்கள் தன்னிடம் ஆபாசமான காட்சிகளை எடுக்க வேண்டும் என்று சொன்னாலும், அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிப்பது இல்லை.
'கதைக்கும், காட்சிக்கும் அவசியம் என்றால், அதற்கு ஏற்ற நடிப்பை கொடுப்பது தான், நல்ல நடிகையருக்கு அழகு...' என்று கூறும் நீலாம்பரி நடிகை, எந்த இளவட்ட இயக்குனர்கள் வீடு தேடி தன்னை சந்திக்க வந்தாலும், அவர்களுக்கு சோம பான விருந்து கொடுத்து உற்சாகப்படுத்துவதையும், வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
இப்படி அம்மணி, புதியவர்களை உபசரிப்பது, 'லீக் - அவுட்' ஆனதை அடுத்து, அம்மணியின் இந்த விருந்துக்காகவே அவரிடம் கதை சொல்வதற்காக ஏராளமான இளவட்டங்கள் படையெடுத்து வருகின்றனர்.
சினி துளிகள்!
* ஜெயிலர் படத்தை அடுத்து, தெலுங்கில், மகேஷ் பாபு நடிக்கும், குண்டுர் காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார், ரம்யாகிருஷ்ணன்.
* லியோ படத்தில், விஜயின் தங்கையாக நடித்திருந்த மலையாள நடிகை மடோனா செபஸ்டின், அடுத்து, பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
அவ்ளோதான்