sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜன 07, 2024

Google News

PUBLISHED ON : ஜன 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர். சாந்தி, புதுக்கோட்டை: ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி எழுதுவதால், தமிழ்நாட்டில் அரசு நுாலகங்களில், 'தினமலர்' நாளிதழை நிறுத்தி விட்டனரே... இதனால், உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா?



பாதிப்பு இல்லை, நன்மையே ஏற்பட்டுள்ளது. அரசு நுாலகங்களில், 'தினமலர்' படித்துக் கொண்டிருந்தவர்கள், தற்போது, காசு கொடுத்து வாங்கி படிக்கின்றனர். அதனால், இப்போது விற்பனை அதிகரித்துள்ளது!       

ஆர். ரகோத்தமன், மதுரை:எனக்கு சினம் வந்து கொண்டே இருக்கிறதே!

வேண்டாம்... சினத்தை வென்றவர், வாழ்வில் வெல்கின்றனர். சினத்தில் மாட்டிக் கொண்டோர், வாழ்வில் தோல்வியை சந்திப்பர். எனவே, சினத்தை ஒழித்துக் கட்டுங்கள்!       

* நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி: 'நாங்கள் ஒன்றுபட்டால், மோடியால் ஒன்றும் செய்ய முடியாது...' என்று, கார்கே கூறியிருக்கிறாரே!



இவர்கள், ஒருவேளை ஒன்று பட்டாலும், பிரதமர் மோடியை ஒன்றும் செய்ய முடியாது. அவர், அவ்வளவு பலத்துடன் இருக்கிறார்!       

எஸ்.கே. ராமசாமி, ஈரோடு: 'என்னிடம், ஆட்சி, அதிகாரத்தை ஒரே ஒருமுறை மட்டும் கொடுங்கள். ஒரே நாளில் எல்லாத்தையும் சரி பண்ணுகிறேன்...' என்று, மக்களிடம், நாம் தமிழர் கட்சி தலைவர், சீமான் கெஞ்சுகிறாரே!



வரும் லோக்சபா தேர்தலில், ஒரே ஒரு தொகுதியிலாவது வெற்றி தாருங்கள் என்று கெஞ்சிப் பார்க்கச் சொல்லுங்கள்... அது நடந்து விட்டால், சட்டசபை தேர்தலின் போது, இதுபோன்ற அறிக்கைகளை சீமான் தரலாம்!

* எல். ரவி, தஞ்சாவூர்: நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான, விஜயகாந்த் மறைவு பற்றி...

மிகவும் வருத்தம் அளிக்கிறது. நல்ல நண்பர். கட்சி ஆரம்பிக்கும்போது, என்னிடம் கேட்டார், 'ஆரம்பியுங்கள்...' என்றேன், நான்.

கட்சி ஆரம்பித்த பின், 'தினமலர்' நாளிதழில், 'கறுப்பு எம்.ஜி.ஆர்.,' என, பட்டம் சூட்டி, பெயர் வைத்தவனும் நான் தான்!          

ஜி. நிலா, சென்னை: 'பாரத ரத்னா' விருது கிடைத்தால், உங்கள், 'ஒரிஜினல்' முகத்தை காட்டுவீர்களா?

அமெரிக்காவில் உள்ள, உலக தமிழ் பல்கலைக் கழகம், எனக்கு, 'டாக்டர்' பட்டம் வழங்கிய பட்டமளிப்பு விழாவில் கூட கலந்து கொண்டு, என், 'ஒரிஜினல்' முகத்தை காட்டவில்லையே... என் சார்பாக ஒருவரை அனுப்பி, பட்டத்தை பெற்றுக் கொண்டேனே!

கே. பாலன், சென்னை: முதியவர், இளைஞர் என்ன வித்தியாசம்?

பழைய நினைவுகளிலேயே காலத்தை கழிப்பவர்கள், முதியவர்கள். எதிர்காலத் திட்டங்களோடு வாழ்பவன், இளைஞன். வயது கூடினாலும் கூட, எதிர்காலத்தைப் பற்றி, திட்டமிட்டு செயலாற்றினால், எல்லாரும் இளைஞர் ஆகிவிடுவோம்!       






      Dinamalar
      Follow us