sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கடவுளும், மனிதனும்!

/

கடவுளும், மனிதனும்!

கடவுளும், மனிதனும்!

கடவுளும், மனிதனும்!


PUBLISHED ON : ஜன 07, 2024

Google News

PUBLISHED ON : ஜன 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நல்லவர்களுக்கு பக்கத்தில் தான், கடவுள் எப்போதும் இருப்பார்...' என, பெரியவர்கள் சொல்வது வழக்கம்.

இதற்கு என்ன காரணம்?

நாம் எப்பவும் நல்லவங்களா இருக்கறதுக்குப் பழகிக்கணும் என்பதற்காக தான்.

நேர்மையாகவும், நல்ல நெறியுடனும் ரொம்ப நாள் வாழ்ந்தார், ஒருத்தர்.

ஒருநாள், அவரது காலம் முடிஞ்சுது. நேரா சொர்க்கத்துக்குப் போய் சேர்ந்தார்.

ரொம்ப பிரியமா வரவேற்பு கொடுத்து உபசரிச்சார், கடவுள். இவருக்கு ரொம்ப சந்தோஷம்.

'உங்க, அன்பும், ஆசிர்வாதமும் எப்பவும் எனக்கு வேணும்...' என்றார்.

'என் ஆசிர்வாதம் எப்பவும் உனக்கு உண்டு. ஏன்னா, நீ ரொம்ப உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்திருக்கே. அதனால, உலகத்துல நீ வாழ்ந்துக்கிட்டு இருந்தப்போ உனக்குப் பின்னாடியே தான், நான் நடந்து வந்துகிட்டிருந்தேன்...' என்றார், கடவுள்.

இந்த வார்த்தையை கேட்டவுடனே அந்த ஆளு மனசு உருகி, கடவுள் கால்ல விழுந்து வணங்கினார்.

உடனே, 'அதோ பார்...' என்று, அவனது கடந்த கால வாழ்க்கையை காட்டினார், கடவுள்.

இவரும் கவனிச்சுப் பார்த்தார்.

'அதோ முன்னாடி தெரிகிறதே, அதெல்லாம் உன் காலடிகள். உனக்குப் பின்னாடி தெரிகிறதே, அதெல்லாம் என் காலடிகள். நான், உன் பின்னாடியே வந்துக்கிட்டிருந்தேன்...' என்றார், கடவுள்.

அதை கூர்ந்து பார்த்துக்கிட்டே வந்தார், இவர். சினிமாவில் தெரியறது மாதிரி தன் பின்னாடியே தொடர்ந்து வந்துகிட்டிருந்த காலடிகள், ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும், மறைஞ்சு போய், ரெண்டு காலடிகள் மட்டுமே வந்துகிட்டிருந்தது. அதாவது, ஒரு ஆளு வர மாதிரி.

அதைப் பார்த்ததும், இந்த ஆளு மனசுக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு. ஏன்னா, இவரு தன் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்பட்ட நேரம் அது.

'நாம ரொம்பவும் கஷ்டப்பட்டுகிட்டிருந்த நேரத்துல, கடவுள், நம்மை தனியா நடக்க விட்டுட்டாரே...' என்று நினைத்து, ரொம்ப வருத்தப்பட்டார்.

இவர் முகத்தைப் பார்த்து, 'ஏன், ஒரு மாதிரியாக இருக்க?' என்றார், கடவுள்.

'வாழ்நாள் பூரா, நீங்க என் பின்னாடி வந்து என்னைக் காப்பாத்தியிருக்கீங்க. ஆனா, நான் வாழ்க்கையில ரொம்பவும் கஷ்டப்பட்ட சமயத்துல, என்னை தனியா விட்டுட்டீங்களே. அதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு...' என்றார்.

'ஓ... அதைச் சொல்றீயா... அங்கே தனியா தெரியறது உன் காலடிகள்னா நினைச்ச... அது, என் காலடிகள்...' என்றார்.

'அது எப்படி?' என்றார்.

'நீ கஷ்டப்பட்ட சமயத்துல, உன்னை, என் தோள்ல துாக்கிக்கிட்டு நடந்தேன். அப்படி நடந்த என் காலடிகளல்லவா அது?' என்றார்.

அதைப் புரிஞ்ச உடனே மறுபடியும் காலில் விழுந்து வணங்கினார், இவர்.

நல்லவர்களுக்கு துணையாக கடவுள் எப்பவும் இருப்பார்ங்கிறதை விளக்கும் கதை இது.

பி. என். பி.,






      Dinamalar
      Follow us