sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : பிப் 11, 2024

Google News

PUBLISHED ON : பிப் 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலவச பேருந்தா... வேண்டவே வேண்டாம்!

சமீபத்தில், எங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊருக்கு, நகர பேருந்தில் பயணித்தேன். எங்களோடு பயணித்த சக ஆண் பயணிகள், இருக்கை இல்லாததால், நின்று கொண்டிருந்தனர்.

அதில் சிலர், 'காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் நாமெல்லாம், நின்னுகிட்டு வருவோம். ஆனால், 'ஓசி' டிக்கெட்டெல்லாம் உட்கார்ந்து வருதுங்க. எல்லாம் நேரம் தான்...' என, நக்கலாக பேசி, கிண்டல் செய்தனர். பேசி, சிரித்த அனைவருமே போதையில் இருந்ததால், அவர்களிடம் எதுவும் பேச முடியவில்லை.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என, அறிவித்தது, அரசு. ஆனால், பயணத்தின் போது, படும் அவஸ்தை மற்றும் அசிங்கங்களை வெளியே சொல்ல முடியாமல் கூனி குறுகி, பல பெண்கள், இலவச பேருந்துகளில் பயணிப்பதையே விட்டு விட்டனர்.

நானே, இனி, இலவச பேருந்தில் பயணிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன். இலவச பேருந்து திட்டத்தால், 99 சதவீத பெண்கள் அசிங்கப்பட்டு தான் பயணிக்கின்றனர் என்பதை, உறுதியாக சொல்வேன்.

அரசியல்வாதிகளிடம், எங்களுக்கு இலவச பஸ் பயணம் வேண்டும் என்று, பெண்கள் யாரும் கேட்கவில்லை. அவர்களின் சுயநலத்துக்காக இப்படி செய்து, பெண்களை அசிங்கப்படுத்துகின்றனர்.

பெண்களின் இலவச பேருந்து பயணத்திற்கு அரசு செய்யும் செலவை, சுய தொழில் செய்ய கடனுதவியாக அவர்களுக்கு வழங்கினால், அவரவர் உழைத்து, சம்பாதித்த பணத்தில் டிக்கெட் எடுத்து நிம்மதியாக பயணம் செய்வர்.

பி. கவிதா, சிதம்பரம்.

எல்லாமே அனுபவமே!

சம்பந்தியுடன் நாங்கள் மற்றும் தோழிகள் ஐவரும், புகழ்பெற்ற கோவிலுக்கு சென்றோம். வழி பாடு முடிந்து வரும் வழியில், கைரேகை பார்ப்பதை கண்டு, பார்க்க உட்கார்ந்தோம்.

வெளிமாநிலத்தவர் என்பதால், 'இதெல்லாம் பழக்கமில்லை...' என்றார், சம்பந்தி. நான் தான் கட்டாயபடுத்தி கையை காட்ட சொன்னேன். ஆனால், அந்த ஜோசிய பெண்மணியிடம் எங்களுக்குள் உள்ள உறவு முறையை சொல்லிக் கொள்ளவில்லை.

ஒவ்வொருத்தருக்கும் நல்லபடியாய் சொல்லிக் கொண்டே வந்தவர், என் சம்பந்திக்கு நிறைய எதிர்மறையாய் சொல்ல ஆரம்பித்தார்.

'வீட்டில் உங்களுக்கு மரியாதை இருக்காது. உங்கள் காசு, பணத்திற்காகத்தான் கூட இருப்பர். இன்னும் இரண்டாண்டு கழித்து தான் உங்களுக்கு பேரப்பிள்ளைகள் பிறப்பர். உங்களை நீங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்...' எனக் கூற, தர்மசங்கடமாகி விட்டது.

இந்நிலையில், வீட்டிற்கு வந்த பிறகு என் சம்பந்தி, இது குறித்து ரொம்பவும் கவலைப்பட்டார். 'இதையே நினைத்து வருந்தக் கூடாது. எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளதான் இப்படியான ஜோசியங்களை கேட்டுக் கொள்ள வேண்டும்...' என ஆறுதல் சொன்னேன், நான்.

ஆனால், அதன் பின் அவரின் நடவடிக்கைகளில், என் மகளை நடத்தும் விதத்தில், உறவுகள் அவரை நலம் விசாரிக்கையில் வேறுபாடாய் தெரிய ஆரம்பித்து விட்டது. ஏதாவது எதிர்த்து சொன்னால், 'எனக்குத் தெரியும், அந்த ஜோசியகாரம்மா சொன்னது போல் தான் நீங்கள் என்னை நடத்துகிறீர்கள்...' என, புலம்ப ஆரம்பித்து விட்டார்.

ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அவருக்கு புரிய வைத்தோம். இப்போது பரவாயில்லை. இதுதான் காசைக் கொடுத்து வினையை வாங்கிக் கொள்வது என்பது!

ம.வான்மதி, சென்னை.

கை கொடுத்த நண்பர்கள்!

தெரிந்தவரின் மகன், முதுகலை கணிதம் முடித்து, அருகிலுள்ள தனியார் கல்லுாரி ஒன்றில், விரிவுரையாளராக பணியாற்றி வந்தான். அவனது பெற்றோர், பல்வேறு நோய்களின் தாக்கத்தில், சில ஆண்டுகளுக்கு முன், அடுத்தடுத்து இறந்து விட்டனர்.

கலங்கி நின்றவனுக்கு, கை கொடுக்க முன் வந்தனர், அவனது நண்பர்கள். அவரவர் பங்காக குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, வசதியான இடத்தை வாடகைக்குப் பிடித்து, டுடோரியல் கல்லுாரி ஒன்றை துவங்க உதவினர். அதுமட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலமாக மாணவர்களை சேர்த்து விட்டனர்.

நண்பனின் திறமையால், தேர்ச்சி விகிதம் கூடி, மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மேலும், ஆசிரியர் பயிற்சி முடித்த பெண் ஒருவரை பார்த்து, அவர்களே முன் நின்று, திருமணத்தையும் நடத்தி வைத்து, நண்பனை, வாழ்க்கையில் உயர வைத்தனர்.

நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து வரும் அவர்களை, அனைவருமே நெகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றனர்!

-வெ.பாலமுருகன், திருச்சி.






      Dinamalar
      Follow us