sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வருகிறது அதிர்ஷ்ட நாள்!

/

வருகிறது அதிர்ஷ்ட நாள்!

வருகிறது அதிர்ஷ்ட நாள்!

வருகிறது அதிர்ஷ்ட நாள்!


PUBLISHED ON : பிப் 18, 2024

Google News

PUBLISHED ON : பிப் 18, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்., 24 - மாசி மகம்

மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது, ஜோதிட சொலவடை. இது ஒரு வகையில் உண்மை தான். தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதா, மகம் நட்சத்திரத்தில், அதுவும் மாசி மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.

மாசி மகத்தன்று அதிகாலை வேளையில், ஒரு பெண் கருத்தரித்தால், பிறக்கும் குழந்தை யோகமுடையதாகவும், நல்ல குணவானாகவும் இருக்கும் என்பது விதி. அதுவும், மாசி மகம் நட்சத்திரம் அதிகாலை, 3:30 - 4:30 மணிக்குள் இருக்குமானால், அது மிக சிறப்பான அம்சம்.

இதை மனதில் கொண்டு தான், 'மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்...' என்பர். உண்மையில், மகத்தில் ஜெனித்தால் ஜெகத்தை ஆளலாம் என்று தான், பொருள் கொள்ள வேண்டும்.

இந்த கர்ப்பம் தரிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்க, நீங்கள் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். ஏனெனில், இவ்வாண்டு பிப்., 24ல், மாசி மகம் நட்சத்திரம் வருகிறது. பிப்., 23 இரவே துவங்கி விடும் மகம் நட்சத்திரம், மறுநாள் இரவு வரை இருக்கிறது.

'மக' என்ற சொல்லுக்கு, குழந்தை என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் மகப்பேறு, மகன், மகள் என்ற சொற்களும் வந்திருக்கிறது. பொதுவாகவே, அதிகாலைப் பொழுதில், முதல் கர்ப்பம் தரிக்குமானால், அது நல்ல விஷயம் தான். அதுவும், மாசி மகம் நாளாக அமையுமானால் பாக்கியத்திலும் பாக்கியம் என்பர்.

மாசி மகத்தன்று, கும்பகோணம் மகா மக குளத்தில் நீராடுவது சிறப்பு. இதற்காக, குடும்பத்தில் ஒட்டு மொத்த பேரும் கிளம்ப வேண்டும் என்பதில்லை. ஒருவர் மட்டும் நீராடினாலும் போதும்!

முந்தைய மற்றும் இப்போதைய தலைமுறையினர் செய்த பாவம் நீங்கி விடும். இனி வரப்போகும் தலைமுறையினர் பாவம் செய்யாத நிலை கிடைக்கும்.

தன் குடும்பம், தாய் வழி, தந்தை வழி குடும்பம், சம்பந்தி (பெண்ணை எடுத்தவர், கொடுத்தவர்) வழி குடும்பம், சிற்றன்னை குடும்பம், உடன்பிறந்தோர் குடும்பம், தந்தையுடன் பிறந்த சகோதரிகள் குடும்பம், தாய் மாமன் ஆகிய ஏழு வகை குடும்பங்களும் பாவம் நீங்கி, புண்ணியம் பெறுவர். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை...

குடும்பம் சார்பில் ஒருவர் நீராடிய பின், அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களின் மனதில் பாவ எண்ணம் உருவாகக் கூடாது.

மாசி மகத்தன்று, இக்குளத்தை சுற்றி வந்தாலும், நற்பலன் கிடைக்கும். ஒருமுறை சுற்றினால், பாற்கடலைக் கடைந்த போது, மத்தாக இருந்த மேருமலையை நுாறு தடவை சுற்றிய பலனும், இருமுறை சுற்றினால், சிவலோகத்தை வலம் வந்த பலனும், மூன்று முறை சுற்றினால், பிறப்பற்ற நிலையும் ஏற்படும்.

இந்த குளத்திற்குள், 19 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் நீராடினால் நினைத்துப் பாராத நன்மைகள் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா மகத்தின் போது, இவற்றில் நீராட வாய்ப்பு கிடைக்கும்.

மகாமக குளக்கரையில், பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திஹேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், வியாசேஸ்வரர், உமைபாகேஸ்வரர், நைருத்தீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதரேஸ்வரர், முத்த தீர்த்தேஸ்வரர் மற்றும் ஷேத்திர பாலேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. இவர்களை வழிபட, நல்லதெல்லாம் நடக்கும்.

மாசி மக அதிர்ஷ்ட நாளை வரவேற்க தயாராவோமா!

தி. செல்லப்பா






      Dinamalar
      Follow us