PUBLISHED ON : பிப் 25, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனாவில் உள்ள மீனவர்கள் சிலர், நதிகளில் மீன் பிடிக்க, வித்தியாசமான ஒரு முறையை கடைப்பிடிக்கின்றனர். அது, துாண்டில் மற்றும் வலைகளுக்கு பதிலாக, நீர் வாழ் பறவைகளை வைத்து, மீன் பிடிக்கின்றனர்.
சீனாவில் உள்ள, லீ நதியில், படகுகளில் நின்று, இந்த பறவைகளின் கால்களில் கயிறு கட்டி நதியில் போட்டு விடுவர். பறவைகள், தண்ணீரில் மூழ்கி, மீன்களை கவ்வி படகுக்கு திரும்புகிறது.
பிடித்த மீனை விழுங்கி விடாமல் இருக்க, பறவையின் கழுத்தில் இரும்பு வளையம் மாட்டி விடுவர். எனவே, பிடித்த மீனை விழுங்காமல், மீனவரிடம் சேர்ப்பித்து விடுகிறது. இந்த மீன் பிடி முறை எளிதாக இருப்பதால், பலரும் இதை பின்பற்றி வருகின்றனர்.
— ஜோல்னாபையன்