
ஹாலிவுட்டில், 'ரீ மேக்'காகும், முதல் இந்திய படம்!
மலையாளத்தில், மோகன்லால், -மீனா இணைந்து நடித்த படம், திரிஷ்யம். அதன் பின், இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சிங்களம், சீனா மற்றும் கொரியன் என, பல மொழிகளில், 'ரீ மேக்' செய்யப்பட்டது.
தற்போது, இப்படத்தை ஹாலிவுட்டிலும், 'ரீ மேக்' செய்யப் போகின்றனர். அந்த வகையில், ஹாலிவுட்டில், 'ரீ மேக்' செய்யப்படும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது, திரிஷ்யம்.
சினிமா பொன்னையா
'அழுகை எனக்கு அருமருந்து!' நித்யா மேனன்!
தனக்கு, ஏதாவது பிரச்னை, 'டென்ஷன்' என்றால், கதவை மூடிக்கொண்டு, ஓவென்று அழுது விடுவார், நடிகை நித்யா மேனன்.
அதோடு, 'பெண்களுக்கு, அழுகை என்பது ஒரு பலமான ஆயுதம் மட்டுமல்லாமல், ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். இதன் மூலம் வலி மற்றும் மன பாரம் குறையும். அழுது கண்ணீர் வடித்தாலே, மனம் லேசாகி, அடுத்த வேலையை நோக்கி, எளிதாக நகர்ந்து விடலாம்...' என்கிறார்.
எலீசா
மீண்டும் களம் இறங்கும், அதர்வா!
பாணா காத்தாடி மற்றும் பரதேசி போன்ற படங்கள், அதர்வாவுக்கு பெயர் வாங்கி கொடுத்த போதும், அடுத்தடுத்து நடித்த படங்கள் தோல்வி அடைந்தன. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில், '30 கதைகள் வரை கேட்டு, கடைசியாக, ராஜேஷ்.எம் சொன்ன கதையில், 'இம்ப்ரஸ்' ஆகி, 'கால்ஷீட்' கொடுத்துள்ளேன். இந்த படத்தின் வாயிலாக, கண்டிப்பாக வெற்றியை சொல்லி அடிப்பேன்...' என்கிறார், அதர்வா.
சினிமா பொன்னையா
'கிரீன் சிக்னல்' கொடுத்த, மாளவிகா!
பாலிவுட்டில், டிசம்பர் மாதம் வெளியான, அனிமல் என்ற படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும், தன்னைத்தான் நடிக்க வைப்பர் என, எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில், அந்த வாய்ப்பை தட்டி துாக்கி இருக்கிறார், மாளவிகா மோகனன்.
'முதல் பாகத்தில், ராஷ்மிகா நடித்ததை விடவும், படுக்கையறை காட்சிகளில், இன்னும் பெரிய அளவில் புகுந்து விளையாடுவேன்...' என்று, உத்தரவாதம் கொடுத்து, இந்த வாய்ப்பை, 'கேட்ச்' பண்ணியுள்ளார், மாளவிகா.
— எலீசா
கறுப்புப் பூனை!
இளவட்ட நடிகர்களை, தன் பக்கம் இழுக்க, 'கிளாமர் போட்டோ ஷூட்' நடத்தி, அந்த புகைப்படங்களை, 'வாட்ஸ் ஆப்' மூலம், சில குறிப்பிட்ட நடிகர்களுக்கு, 'பாஸ்' பண்ணி வருகிறார், காக்கா முட்டை நடிகை.
தன் கட்டுடலை பார்த்து திக்குமுக்காடி, 'டூயட்' பாட, துடித்து படையெடுப்பர் என்று எதிர்பார்த்த நடிகைக்கு, அதிர்ச்சியே மிஞ்சியது.
அவர் அனுப்பிய கவர்ச்சி படங்களைப் பார்த்து, 'இதெல்லாம் வேலைக்காகாது. நீங்கள் எல்லாம் இனிமேல், அண்ணி, அக்கா வேடத்திற்கு தான் பொருத்தமாக இருப்பீர்கள்...' என்று, 'கமென்ட்' கொடுத்து, காக்கா முட்டை நடிகைக்கு, பலத்த, 'ஷாக்' கொடுத்துள்ளனர்.
சினி துளிகள்!
* சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில், தமிழக அரசு சார்பில், 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில், பிரமாண்டமான திரைப்பட நகரம் உருவாகிறது.
* கதையின் நாயகியாக நடித்த படங்கள், காலை வாரி விட்டதால், தற்போது, மூன்றாம் தட்டு, 'ஹீரோ'களின் படங்களுக்கு, கல்லெறிந்து வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.
* தன் நீண்டநாள் காதலரான, பேட்மின்டன் வீரர், மாத்யாஸ் போ என்பவரை, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார், நடிகை டாப்சி.
அவ்ளோதான்!