PUBLISHED ON : மார் 17, 2024

கோடை காலத்தில், காலை வேளையில், எளிதில் ஜீரணமாகும், உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தர்பூசணி மற்றும் முலாம் உள்ளிட்ட சீசன் பழங்களை சாப்பிட வேண்டும். இவை, சரும பிரச்னைகளை சரிசெய்யும். உடல் கழிவுகளை நீக்கும்.
*இரவில் சாதம் வடித்து உண்பவர்கள், சாதத்தை அதிகமாக வடித்து, மிஞ்சும் சாதத்தில், தண்ணீர் ஊற்றி வைத்து, மறுநாள் காலை, பழைய சோறு, நீராகாரமாக குடிக்கலாம்.
*சூடான சாதத்தில் மோரை தாளித்து கலந்து சாப்பிடலாம்.
*நீர்ச்சத்து அதிகமுள்ள, பூசணி, வெள்ளரி, புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடலாம். இது, உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.
*வெந்தயக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டால், உடலில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள நார்ச்சத்து, வயிறு கோளாறுகளை சரிசெய்யும்.
* ஆப்பிள், திராட்சை, அன்னாசி, மாதுளை, தர்பூசணி, வெள்ளரி, கேரட் உள்ளிட்டவைகளை நறுக்கி, ஒன்றாக கலந்து, 'புருட் சாலட்'டாக சாப்பிடலாம்.