sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஏப் 07, 2024

Google News

PUBLISHED ON : ஏப் 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூன்று, 'கெட் -அப்'பில், கமலஹாசன்!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய, தசாவதாரம் படத்தில், 10 'கெட் - அப்'புகளில் நடித்த, கமலஹாசன், தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும், தக்லைப் படத்தில், மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

மேலும், இந்த மூன்று வேடங்களிலும் மிகப்பெரிய வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக, உடல் எடையை குறைத்து ஒரு, 'கெட்-அப்' அதிகப்படுத்தி இன்னொரு, 'கெட்-அப்!' தலையில் பெரிய அளவில் முடி வளர்த்து, கடா மீசையில் ஒரு 'கெட்-அப்' என, கமலஹாசனை, இப்படத்தில், மாறுபட்ட கோணத்தில் காட்டப் போகிறார், மணிரத்னம்.

— சினிமா பொன்னையா

மீண்டும் நாயகியாக உருவெடுத்த, அனுஷ்கா!

தற்போது, தமிழ், தெலுங்கில் உருவாகும், காட்டி என்ற படத்தில், கதையின் நாயகியாக நடிக்கிறார், அனுஷ்கா.

'அப்பாவியாக இருந்து, பழி வாங்கும் ஒரு பெண்ணாக நடிக்க போகும் இந்த படத்தில், மிக கம்பீரமான தோற்றத்தில் என்னை வெளிப்படுத்தப் போகிறேன். அதனால், மலையாளத்தில் நடிக்கும், காதனர் படத்திற்காக, எடை குறைத்து, 'ஸ்லிம்' ஆன நான், காட்டி படத்திற்காக, என் உடற்கட்டை கம்பீரமான தோற்றத்திற்கு மாற்றப் போகிறேன்...' என்கிறார், அனுஷ்கா.

எலீசா

ஆண்ட்ரியாவை, 'டென்ஷன்' ஆக்கிய இயக்குனர்!

வட சென்னை போன்ற சில படங்களில், அரை நிர்வாண காட்சிகளில் கூட தயங்காமல் நடித்தவர், ஆண்ட்ரியா. 'எனக்குள் இருக்கும் முழு திறமையையும், இன்னும் எந்த இயக்குனரும் வெளியில் கொண்டு வரவில்லை...' என்று, வருத்தப்படுகிறார்.

மேலும், 'என்னை, ஒரு, 'கிளுகிளு'ப்பான அலங்கார பொருளாக மட்டுமே நினைக்கும், இயக்குனர்கள், எனக்குள் இருக்கும் அழுத்தமான நடிகையை வெளியில் கொண்டு வரவேண்டும் என்பதே என் கோரிக்கை. இதை யாராவது நிறைவேற்றுவரா என எதிர்பார்த்திருக்கிறேன்...' என்கிறார், ஆண்ட்ரியா.

எலீசா

கோலிவுட்டில் முகாமிட்ட, அனுபமா பரமேஸ்வரன்!

தமிழில், கொடி, தள்ளிப் போகாதே போன்ற படங்களில் நடித்தபோதும், மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக, சைரன் படத்தில் நடித்த, அனுபமா, அடுத்தபடியாக, மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை கைப்பற்றி இருக்கிறார். மேலும், புதிய படங்களை கைப்பற்ற, சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் முகாமிட்டபடி, சில மெகா பட கம்பெனிகளுக்கு ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிறார்.

எலீசா

விஜயகாந்த்,'ரூட்'டை பிடிக்கும், சண்முக பாண்டியன்!

நடிகர் விஜயகாந்தின், இளைய மகனான, சண்முக பாண்டியன், சகாப்தம் மற்றும் மதுரை வீரன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது, படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

காட்டு யானைகளின் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வரும், இந்த படத்தில், மிகப்பெரிய தலைமுடி, தாடி வைத்து, நடித்து வருகிறார்.

'தந்தை, விஜயகாந்த் பாணியில், 'ஆக் ஷன் ஹீரோ'வாக திட்டமிட்டுள்ளேன். என் ஒவ்வொரு படங்களிலும், நான்கு முதல் ஐந்து சண்டை காட்சிகளாவது கட்டாயம் இருக்க வேண்டும் என்ற கோணத்தில், புதிய கதைகளை கேட்டு வருகிறேன்...' என்கிறார், சண்முக பாண்டியன்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

அரசியல் கட்சி துவங்கிய, தளபதி நடிகரை, சமீபத்தில் சந்தித்த, ஒரு அரசியல் கட்சி தலைவர், 'நீங்கள், முழுநேர அரசியலுக்கு வர வேண்டாம். என் கட்சியுடன் கூட்டணி வைத்து, சினிமாவில் நடித்துக் கொண்டே, அரசியலிலும் பயணியுங்கள். தேர்தல் அரசியலில், நம் கூட்டணி வெற்றி பெறும்போது, இரட்டை முதல்வர் ஆகி விடுவோம்...' என்று கூறியிருக்கிறார்.

அதைக் கேட்ட தளபதியோ, 'இப்போது இருப்பதெல்லாமே, ஊழல் கட்சிகள் தான். அதனால், ஊழலை ஒழித்து, நேர்மையான அரசியல் செய்ய வந்துள்ள நான், உங்களுடன் கூட்டணி வைத்தால், என் பெயரும், 'டேமேஜ்' ஆகி விடும். எனவே, உங்கள் கூட்டணியும் வேண்டாம். முதல்வர் பதவியும் எனக்கு வேண்டாம்...' என்று, அந்த கட்சியின் தலைவரை, 'கெட் - அவுட்' சொல்லி விட்டார்.

சினி துளிகள்!

* படிக்கும்போதே, நாடகங்களில் நடித்து பரிசுகளை வென்றதுதான், நான் சினிமாவில் நடிகையாவதற்கு காரணமாக அமைந்தது...' என்கிறார், நடிகை கீர்த்தி சுரேஷ்.

* இந்தியன் -2 படத்தில், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என, மூன்று நடிகையர் இருந்தபோதும், கமலுக்கு, யாருமே ஜோடி கிடையாது.

* விஜய் நடித்து வரும், கோட் படத்தின், இறுதி கட்ட படப்பிடிப்பு, தற்போது, கேரளாவில் நடைபெற்று வருகிறது.

அவ்ளோதான்






      Dinamalar
      Follow us