PUBLISHED ON : ஏப் 07, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியா - வங்காளதேச எல்லையில் பாயும் உங்கோட்டு நதி, இரண்டு நாடுகளையும் வளமை ஆக்கி வருகிறது. பாதுகாப்புக்காக நதியோரம் இருக்கும் இந்திய -- வங்கதேச ராணுவத்தினர், நண்பர்களை போல சிரித்து பேசுவதை காணலாம்.
இந்நதியில், தண்ணீர் குறையும்போது, அழகான உருண்டை வடிவ கற்களை காணமுடியும். இந்த கற்களை லாரிகளில் ஏற்றி வங்க தேசத்துக்கு எடுத்து செல்வர். தினமும், 500 லாரிகளாவது கற்களுடன் செல்கின்றன. இந்த கற்கள், சிமென்ட்டாக உருமாறி, இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது.
— ஜோல்னாபையன்