
தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில், பிரம்மோற்சவம், இந்திர விழா, சித்திரை விழா மற்றும் தேரோட்டம் ஆகிய சிறப்புமிக்க விழாக்கள் வருகின்றன. அனைத்து தெய்வங்களின் அருளைப் பெற எல்லா சிறப்பு விழாக்களும் அணிவகுத்து நிற்பதை காணும்போது சித்திரையின் மகத்துவத்தை நம்மால் அறிய முடியும்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கூவாகத்தில், கூத்தாண்டவருக்கு பிரமாண்ட விழாவும், சித்திரை மாதத்தில் நடைபெறும்.
புது ஆண்டு உதயத்தை, பைசாகி, சைத்ரா, சைத்ர விஷு என்று பல பெயர்களில் அழைக்கின்றனர், வட மாநிலத்தவர்.
ஸ்ரீராமபிரான், ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதாரங்களும், சித்திரையில் தான் நிகழ்ந்துள்ளன.
தை மாதத்தில், சூரியன் மகர ராசியில் நுழையும் போது, 'கரணாத் கார்ய சித்தி' என்ற வாக்கின்படி எடுத்த செயல் நடக்குமா என்று கேட்கவே முடியும். ஆனால், சித்திரை மாதம், மேஷ ராசியில் சூரியன் நுழையும் நேரம், ஜக இலக்கணம் எனப்படும். உலகத்தின் இலக்கணம் என்று சொல்லப்படும் இந்த நிகழ்வால் உலக நடப்புகள், அபூர்வ நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடியும்.