
திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு!
காமராஜ் என்ற பெயரில் முன்னாள் முதல்வர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கினார், பாலகிருஷ்ணன். தற்போது, திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறை படமாக்கப் போகிறார். இதில், திருவள்ளுவரின் திருக்குறளில் சொல்லப்பட்ட கருத்துக்கள் மட்டுமின்றி, அவர் வாழ்ந்த, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டையும், 'செட்' போட்டு படமாக்குகின்றனர்.
முக்கியமாக, அன்றைய தமிழர்களின் தொழில், வணிகம் மற்றும் வாழ்வியல் ஆகியவற்றையும் படமாக்கி, உலகம் எங்கும் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.
சினிமா பொன்னையா
நயன்தாராவை ஓரங்கட்டிய, விஜய்!
விஜயுடன், சிவகாசி, வில்லு மற்றும் பிகில் போன்ற படங்களில் நடித்தார், நயன்தாரா. சமீபகாலமாக, விஜயுடன் மீண்டும், த்ரிஷா ஜோடி போட்டு வருவதால், விஜயின்,- 69வது படத்தில், தானும் இணைந்து விட வேண்டும் என்று, துாது விட்டு வந்தார், நயன்தாரா.
ஆனால், அப்படத்தில் நடிப்பதற்கு, த்ரிஷா, சமந்தா, மிருணாள் தாக்கூர் போன்ற நடிகையரிடம் பேச்சு நடத்த சொன்ன விஜய், நயன்தாராவை,'ரிஜெக்ட்' செய்து, பலத்த அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சி.பொ.,
பாட்ஷா பாணியில், வேட்டையனில் பாடல்!
ரஜினியின், 'சூப்பர் ஹிட்' படமான, பாட்ஷா படத்தில் இடம் பெற்ற, ஆட்டோக்காரன் என்ற பாடல், அந்த சமயத்தில், 'மெகா ஹிட்' அடித்தது. தற்போது, தான் நடித்து வரும், வேட்டையன் படத்திலும், 'ஓப்பனிங்' பாடலை, அதே பாணியில் உருவாக்குமாறு, அனிருத்துக்கு உத்தரவு போட்டார், ரஜினி.
அதையடுத்து கிட்டத்தட்ட, 30 டியூன்கள் போட்டு, அதில் ஒன்றை, ரஜினியை, தேர்வு செய்ய வைத்து, அந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார், அனிருத். இந்த பாடலை படமாக்குவதற்காக, தற்போது, சென்னையில், பிரமாண்டமான, 'செட்' அமைக்கும்பணி நடந்து வருகிறது.
சி.பொ.,
கீர்த்தி சுரேஷுக்கு, 'ஷாக்' கொடுத்த நடிகையர்!
சமீபகாலமாக, கீர்த்தி சுரேஷை, முன்னணி, 'ஹீரோ'கள் கண்டு கொள்ளாத நிலையில், இரண்டாம் தட்டு, 'ஹீரோ'களுடன் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.
ஹிந்தி மற்றும் கன்னட சினிமாவிலிருந்து, மீனாட்சி சவுத்ரி, கிருத்தி ஷெட்டி மற்றும் சுவாதி கொண்டே என, பல புது வரவு நடிகையர் கோலிவுட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள், முன்னணி தமிழ் நடிகர்களின் படங்களை கைப்பற்றி வருவதால், தன் சினிமா எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருக்கிறார், கீர்த்தி சுரேஷ்.
இனிமேல் சினிமாவில் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டவர், தற்போது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய, 'வெப் சீரியல்'கள் பக்கம், கவனத்தை திருப்பி இருக்கிறார்.
— எலீசா
இளையராஜா படத்தில் இணையும், பிரபலங்கள்!
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், ரஜினி, கமல் மற்றும் பாரதிராஜா ஆகியோர், கவுரவ வேடங்களில் நடிக்கின்றனர்.
அதையடுத்து, மணிரத்னம் வேடத்தில், மாதவனும், ஏ.ஆர்.ரஹ்மான் வேடத்தில், சிம்புவும், கவிஞர் வைரமுத்து வேடத்தில், விஷாலும், இப்படத்தில் நடிக்க போகின்றனர்.
— சி.பொ.,
வெறித்தனமான வேடத்தில், விக்ரம்!
தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ள, விக்ரம், அதையடுத்து, அருண்குமார் இயக்கும், வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதிரடியான, 'ஆக் ஷன்' கதையில் உருவாகும் இந்த படம், கன்னடத்தில், ரிஷப் செட்டி இயக்கத்தில் வெளியான, காந்தாரா படத்தை போலவே, இரண்டு பாகங்களாக உருவாகிறது.
மேலும், இதுவரை, உடலை வருத்தி மாறுபட்ட, 'கெட் - அப்'பில் நடித்திருக்கிறார், விக்ரம். இந்த படத்தில், இதுவரை தான் நடித்திராத வகையில், படம் முழுக்க, அரிவாளும், கையுமாக திரியும் வெறித்தனமான வேடத்தில் நடித்து வருகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
புஷ்பா நடிகை, பாலிவுட்டில் நடித்த நான்கெழுத்து படத்தில், அவரை, படுக்கையறை நடிகை ஆக்கிவிட்டதால் அடுத்தடுத்து, பல இயக்குனர்களும், படுக்கையறை காட்சிகளுடன் அவரை துரத்த துவங்கினர்.
இதனால், கொஞ்சம் விட்டால், தன்னை, பிட்டு பட நடிகையாக்கி விடுவர் போலிருக்கே என்று பயந்து போன நடிகை, 'இனிமேல், எந்த படத்திலும், 'லிமிட்' தாண்ட மாட்டேன்...' என்று கோலிவுட், டோலிவுட் இயக்குனர்களுக்கு, அவசர செய்தி அனுப்பியுள்ளார். அதோடு, சினிமா விழாக்களுக்கு கூட, முன்பு போன்று துக்கடா உடையணிந்து, 'விசிட்' அடிக்காமல், புடவை, 'கெட் - அப்'பில் வரத் துவங்கியுள்ளார்.
சினி துளிகள்!
* 'புஷ்பா படத்தின் முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில், என்னுடைய ஸ்ரீவள்ளி கேரக்டர், பெரிய அளவில் பேசப்படும்...' என்கிறார், ராஷ்மிகா மந்தனா.
அவ்ளோதான்!