
ராகி கூழ்:
புரதம், அமினோ ஆசிட், கால்சியம், வைட்டமின் டி என, அத்தனை முக்கியமான சத்துக்களும் அடங்கியது. கர்ப்பிணி பெண்கள் இதை அவசியம் குடிக்க வேண்டும்.
கற்றாழை ஜூஸ்:
கற்றாழை சாறுடன், சிறிதளவு மிளகுத் துாள் சேர்த்துக் கொண்டால், இதன் குளிர்ச்சி, உடம்பை எந்த தொல்லையும் செய்யாது. மூலம் மற்றும் உடற்பருமன் பிரச்னை இருப்பவர்களுக்கு நல்லது.
கரும்புச்சாறு:
கரும்பு சாறை ஐஸ் போடாமல் வாங்கி குடியுங்கள். இதிலுள்ள கால்சியமும், மெக்னீஷியமும் எலும்புகளுக்கு அத்தனை நல்லது.
கோதுமைப்புல் சாறு:
கறுப்பு மண்ணில் கோதுமையை விதைத்து, கோதுமைப் புல், விளைந்ததும், அதன் மேல் பாகத்தை, 'கட்' செய்து, அரைத்து, தினமும், இரண்டு அவுன்ஸ் குடிக்கலாம். வைட்டமின் ஏ, பி, ஈ மற்றும் கே எல்லாம் நிறைந்தது. இதயத்துக்கு நல்லது. முக்கியமாக புற்றுநோயை வர விடாது. வந்தவர்கள் குடித்தால் புற்றுசெல்கள் அதிகரிக்காமல் தடுக்கும்; அவர்களின் வாழ்நாட்களையும் அதிகரிக்கும்.