
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'வயதானால் வூட்ல சும்மா இருக்கணும்; அத உட்டுட்டு, 'டான்ஸ்' ஆடுறாங்களாம் டான்சு!' இப்படி பலரும் கூறுவர்.
இதுபற்றி கவலைப்படாமல், 'க்ராண்ட் மதர்ஸ் டான்ஸ் டீம்' என்ற நடன குழுவை அமைத்து, மேடை ஏறி, அசத்தி வருகின்றனர், கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த பாட்டிகள்.
'டிவி' நிகழ்ச்சிகளில் இவர்களின் நடனத்தைக் கண்டவர்கள், '77 வயது எல்லாம் ஒரு வயதா...' என கேட்டு, இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.
பல கல்லுாரிகளில் இருந்தும், இவர்களை அழைத்து, நடனம் ஆட சொல்கின்றனர். வயது என்பது வெறும் எண்கள் தான் என்கின்றனர், இந்த, 'இளம்' பெண்கள்.
ஜோல்னாபையன்