
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காலியான ஷாம்பூ பாட்டிலில், சிறிதளவு நீர் ஊற்றி குலுக்கி, வாஷிங் மெஷினில் துணிதுவைக்கும் போது, அந்த நீரை ஊற்றினால், துணிகள் பளிச்சென்றும், வாசனையுடனும் இருக்கும்.
* முகம் பார்க்கும் கண்ணாடியை பிரெட்டை வைத்து துடைத்து, பின் ஈரமான துணியில் துடையுங்கள். எண்ணெய் பிசுக்கெல்லாம் நீங்கி, கண்ணாடி ஜொலிக்கும்.
* வெள்ளை நிற சாக்சில், கால் பாதம் படும் இடம் மட்டும் அதிகப்படியான அழுக்கு படியும். கொதிக்கும் நீரில், சில துளிகள் எலுமிச்சை சாறை ஊற்றி, அதில், சாக்சை ஊற வையுங்கள். சில மணி நேரம் கழித்து, தேய்த்து துவைக்க அழுக்குகள் காணாமல் போகும்.