PUBLISHED ON : மே 19, 2024

யாரோ ஒருவர் செய்த
சாதனைகளில் தான்
வாழ்க்கைச் சக்கரம்
சுழல்கிறது!
யாரோ ஒருவர்
நட்டு வைத்த விதையின்
மர நிழலில் தான்
இளைப்பாறுகிறோம்!
யாரோ ஒருவர்
ராப்பகலாய் முயன்ற
அரிய வகை மின்சாரத்தில்
உலகமே இயங்குகிறது!
யாரோ ஒருவர்
செய்த சாதனை தான்
சொகுசு வாகனங்களில்
சுகமாய் பயணிக்கிறோம்!
யாரோ ஒருவர் உருவாக்கிய
மின்சார மோட்டாரால்
விளை நிலத்தில்
பயிர்கள் செழித்து வளர்கின்றன!
நீரில் மிதக்கும் கப்பல்கள்
வானில் ஊர்ந்து செல்லும்
விமானங்கள்...
இன்னும் பல பல...
சுயநலமின்றி வாழ்ந்து சென்றசாதனை மனிதர்களின்
சிந்தையும், செயலுமே
நாம் பெற்ற வரங்களாகும்!
முகம் காணாத அவர்கள்
இன்றும் நம்முடன்
ஒன்றாய் கலந்து
நிழலாய் தொடர்கின்றனர்!
யாரோ ஒருவரென பலர்
விட்டுச் சென்ற
பொக்கிஷங்களில் தான்
சுழன்று கொண்டிருக்கிறோம்!
எதிர் வரும் தலைமுறைக்கு
விலை மதிப்பற்ற எதையேனும்
விதைத்து விட்டு செல்வோம்...
அந்த யாரோ ஒருவராக!
— ஜி சுந்தரராஜன், திருத்தங்கல்.