/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - சிறியதோ, பெரியதோ....
/
கவிதைச்சோலை - சிறியதோ, பெரியதோ....
PUBLISHED ON : மே 26, 2024

சிறியதோ, பெரியதோ
வெற்றியை கொண்டாடு...
சிறியதோ, பெரியதோ
தவறுக்கு வருத்தம் கூறு!
சிறியதோ, பெரியதோ
உரியவருக்கு உதவிடு...
சிறியதோ, பெரியதோ
தீயிடம் கவனமாய் இரு!
சிறியதோ, பெரியதோ
கவலைகளை விரட்டிடு...
சிறியதோ, பெரியதோ
நஷ்டத்தின் காரணம் தேடு!
சிறியதோ, பெரியதோ
விரிசலை அடைத்திடு...
சிறியதோ, பெரியதோ
பகையிடம் எட்டியே நில்!
சிறியதோ, பெரியதோ
கிழிசலைத் தைத்திடு...
சிறியதோ, பெரியதோ
தீங்குக்கு சவுக்கடி கொடு!
சிறியதோ, பெரியதோ
நன்மைகளைச் செய்திடு...
சிறியதோ, பெரியதோ
எதிர்ப்புக்கு பதிலடி தந்திடு!
சிறியதோ, பெரியதோ
மோசடியைத் தடுத்திடு...
சிறியதோ, பெரியதோ
பாதகத்தைப் பொசுக்கிடு!
சிறியதோ, பெரியதோ
சினத்தைத் தவிர்த்திடு...
சிறியதோ, பெரியதோ
சொற்களில் இனிமை சேர்!
— விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.