
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* முருங்கை இலைகளை உருவிய பின் எஞ்சி நிற்கும் ஈர்க்கை, சிறிது சிறிதாக நறுக்கிப் போட்டு, மிளகு ரசம் வைத்து, இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் அசதி உடனே போகும்.
* சிலருக்கு வாயு உபத்திரவத்தால், அடிக்கடி ஏப்பம் வரும். அதற்கு, சிறிது சீரகத்தை எடுத்து கரண்டியில் படபடவென்று பொரிய விட்டு, பின் அதை பொடிக்கவும். ஒரு தேக்கரண்டி தேனில் அந்த பொடியை குழைத்து, ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட்டு வர, ஏப்பம் குறையும். மூன்று நாட்களில் அதன் பலன் தெரியும்