PUBLISHED ON : ஜூன் 23, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரளாவுக்கு, சப்பாத்தி அறிமுகமாகி, 100 ஆண்டுகள் ஆகின்றன. வைக்கம் போராட்டம் நடைபெற்ற, 1924ம் ஆண்டு முதல் தான், மலையாளிகள், சப்பாத்தியின் ருசியை முதல் முதலாக அறிந்து கொண்டனர்.
போராட்டக்காரர்களுக்கு, இலவசமாக உணவு அளிக்கும் பொறுப்பை, சீக்கியர்கள் ஏற்றுக் கொண்டனர். போராட்டம் செய்து சோர்வு அடைந்து, பசியுடன் வரும் வீரர்களுக்கு உணவு அளிப்பதில், மகிழ்ச்சியடைந்தனர், சீக்கியர்கள். அவர்கள் சமைக்கும் சப்பாத்தியும், உருளைக்கிழங்கு மசாலாவும், மலையாளிகளுக்கு புதிதாக இருந்தது.
அன்று, சப்பாத்தி சாப்பிட துவங்கியவர்கள் தான், இன்று, பரோட்டாவும், பீப் கறியும் தான், பெரும்பான்மையான மலையாளிகளின் பிரியமான உணவாகி உள்ளது.
ஜோல்னாபையன்