
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முழுக்க முழுக்க, விதவைகளால் நிர்வகிக்கப்படும் மார்க்கெட், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருக்கிறது. 'பாளையம் மார்க்கெட்' என அழைக்கப்படும் இந்த சந்தையில், 50க்கும் மேற்பட்ட விதவைகள், பல பொருட்களை வியாபாரம் செய்கின்றனர்.
திடீரென்று, கணவனை இழந்து நிலை தடுமாறும் பல பெண்கள், எப்படி குழந்தைகளை வளர்ப்பது என, வாழ்க்கையில் சோர்வு அடைந்து தற்கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றனர். அதிலிருந்து மீட்க, கணவர்களை இழந்த இவர்களின் வாழ்வாதாரத்துக்காக, இந்த மார்க்கெட் கட்டப்பட்டது. கணவனை இழந்த போதும், எங்களாலும் வாழ்ந்து காட்ட முடியும் என, இங்குள்ள பெண்கள் நிரூபித்து வருகின்றனர்.
— ஜோல்னாபையன்