
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதனுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம், காய்கறிகள். அதிலும், பாகற்காய், 100 காய்கறிகளுக்கு சமம். அறுசுவைகளுள் கசப்பு சுவையை எவ்வளவு கொடுத்தாலும் உடல் ஏற்றுக் கொள்ளும். இதேபோன்று, 300 காய்கறிகளுக்கு சமம் பிரண்டை. 'பசித்த வயிற்று மீது பிரண்டையை தான் கட்டிக் கொள்ள வேண்டும்...' என்பர். வயிற்று மேல் பற்று போட்டாலே உள்ளுக்குள் பலன் தரக்கூடியது பிரண்டை.
பலாக்காய், 600 காய்கறிகளுக்கு சமம். பலாக்காய் கூட்டு, பொரியல் எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். அவ்வளவு பலம் பொருந்தியது. பால் தன்மை உடையது. உடலுக்குள் ஒட்டி உறவாடி, புண்களை ஆற்றவல்லது.