PUBLISHED ON : மே 14, 2023

அ நிறம் | அளவு
எவ்வளவுதான் நாகரிகம் வளர்ந்தாலும், சில பழங்குடி இன மக்கள், தங்கள் ஆசாரங்களை கைவிடுவது இல்லை.
தென்கிழக்காசிய நாடான வியட்நாமின், ஹனோய் நகரில் வசிக்கும், 'ரெட் டாவோ' இன ஆதிவாசி மக்கள் வாழ்க்கையுடன், எருமைகள் இணைந்து இருக்கிறது.
எருமைகளை கொன்று, துண்டு துண்டுகளாக வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட இலையில் வைத்து, மறைந்த பெற்றோர்களுக்கு படையல் செய்கின்றனர். கொல்லப்படும் எருமை நேரடியாக சொர்க்கத்துக்கு சென்று, தங்களை பற்றிய விபரங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்வதாக நம்புகின்றனர், இவர்கள்.
பிறகு, எருமை மாட்டின் இறைச்சியை வெறுமனே வேக வைத்து, உப்பு மசாலா எதுவும் போடாமல் சாப்பிட்டு, மற்றவர்களுக்கும் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஜோல்னாபையன்
