தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து - மருதாணி!

நம்மிடமே இருக்கு மருந்து - மருதாணி!

நம்மிடமே இருக்கு மருந்து - மருதாணி!


PUBLISHED ON : மே 14, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடலுக்கு குளிர்ச்சி தரும் மருதாணியின் மருத்துவப் பயன்கள்:

பெண்கள் கைகளில் அழகுக்காக வைத்துக் கொள்ளும் மருதாணியில், பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

* மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள், கற்பூரம் சேர்த்து அரைத்து, உள்ளங்காலில் ஆணி உள்ள இடத்தில் பூசினால், ஒரு வாரத்தில் கட்டி குணமாகும்

* மருதாணி இலையை அரைத்து, கைகளுக்கு வைத்தால், உடல் வெப்பம் தணியும்

* மருதாணி இலை மிகச்சிறந்த கிருமி நாசினி. இது, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்

* மருதாணி இலை, பித்தத்தை அதிகமாக்கும். கை, கால்களில் தோன்றும் சேற்றுப் புண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்தவெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்

* மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால், தலைவலி குணமாகும். அரிப்பு, படை போன்ற தோல் நோய்களுக்கு மிகவும் சிறந்தது, மருதாணி

* மருதாணி இலையை அரைத்து, அம்மைப் புண்களுக்கு பூசினால், நான்கைந்து நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப் பூசலாம்

* இள நரையை அகற்றுவதற்கு பயன்படுகிறது. இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய், அரை லிட்டர் விட்டு, மருதாணி இலை, 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்ந்து சிவப்பாக மாறிவிடும். இந்த தைலத்தை தினமும் தலைக்கு தேய்க்க, முடி வளரும், நரை மறையும்

* மருதாணி இலையை நன்கு நீர் விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை, கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால், கை, கால் எரிச்சல் உடனே நீங்கும்.

தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us