PUBLISHED ON : ஏப் 16, 2023

கடவுள் சிலைகளை உருவாக்கும், 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஒரே ஊரில் வசிக்கின்றனர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! கேரள மாநிலம், திருச்சூர், குன்னங்குளம் கிராமத்தில் தான், இந்த தெய்வீக கலைஞர்கள் இருக்கின்றனர்.
இங்கே, 400க்கும் மேற்பட்ட சிற்பிகள் இருக்கின்றனர். இவர்கள், கருங்கல்லில் வித விதமான கடவுள் உருவங்களை படைக்கின்றனர்.
கொடுங்கல்லுார் மன்னன் சேரமான் பெருமாளுக்கு, குழந்தை இல்லை. எனவே, 108 சிவன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என, ஆரூடம் சொல்லப்பட்டது. மன்னன், ராணியுடன் இத்தனை கோவில்களுக்கும் சென்று வருவது சிரமம் என்பதால், பரிகாரம் கேட்டார்.
'சிற்பிகளை வரவழைத்து, சிலைகள் வடித்து அதை கும்பிட்டாலே போதும்...' என்றனர். உடனே, தஞ்சாவூரிலிருந்து சிற்பிகளை வரவழைத்து, சிலைகளை வடிக்க செய்து, பூஜை செய்தார், மன்னர். இந்த சிற்பிகளின் வாரிசுகள் தான், பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
ஜோல்னாபையன்
