தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஏன்?

ஏன்?

ஏன்?


PUBLISHED ON : ஏப் 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரத்தின் கீழ் ஏன் துாங்கக் கூடாது?

பகல் நேரங்களில் மரத்தின் அடியில் படுத்துறங்குவது தவறில்லை. ஆனால், இரவு நேரங்களில் மரத்தடியில் படுப்பது, தீங்கானது. பகல் நேரத்தில், தாவரங்கள், காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகின்றன. அதனால், மரத்தடியில் படுப்பவருக்கு பாதிப்பு ஏற்படாது.

ஆனால், இரவில், மரங்களும் காற்றிலுள்ள பிராண வாயுவை உட்கொண்டு, கரியமில வாயுவை வெளியிடுகின்றன. அதனால், மரத்தடியில் படுப்பவருக்கு, சுவாசிக்க தேவையான அளவுக்கு பிராண வாயு கிடைக்காது; கரியமில வாயுவையே சுவாசிக்க நேரும். அதனால், இரவில் மரத்தடியில் படுப்பவரின் உடல்நலம் பாதிக்கப்படும்.

உச்சி வெயிலில் கிணற்றை எட்டிப் பார்க்கக் கூடாது என்று ஏன் சொல்கின்றனர்?

உச்சி வெயில் நேரங்களில், சூரிய ஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது. இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷ வாயு உண்டாகலாம். அப்போது, கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாகவோ, அதன் காரணமாக கிணற்றுக்குள் தவறி விழவோ வாய்ப்புண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us