தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/துணிச்சல்கார இயக்குனர் வினயன்!

துணிச்சல்கார இயக்குனர் வினயன்!

துணிச்சல்கார இயக்குனர் வினயன்!


PUBLISHED ON : செப் 01, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் - மலையாள டைரக்டர் வினயன், சற்று வித்தியாசமானவர். 500 குள்ளர்களை வைத்து, படம் எடுத்து அசத்திய இவர், 'டிராக்குலா - 2012' என்று, ஒரு படம் தயாரித்து, இயக்கியுள்ளார். இதற்காக ஹாலிவுட் பேய் கதாபாத்திரமான, 'டிராக்குலா' வாழ்ந்ததாக கூறப்படும் பேய் அரண்மனையிலேயே, படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தார். அதற்காக, 78 பேர் அடங்கிய படப்பிடிப்பு குழுவினருடன், ருமேனியா நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு, படப்பிடிப்பு நடைபெற இருப்பதை அறிந்த, அருகில் உள்ள சர்ச் பாதிரியார் சில் வெஸ்டர் திடுக்கிட்டு, 'இங்கு படப்பிடிப்பு நடத்தினால், தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர் இவர்களில் ஒருவர், படம் ரிலீஸ் ஆவதற்கு முன் இறந்து விடுவார்...' என எச்சரித்தார்.

'முப்பது லட்சத்துக்கு மேல் செலவு செய்து, படப்பிடிப்பு நடத்தாமல் திரும்புவதா... எது வந்தாலும் சந்திப்போம். மேலே குறிப்பிட்ட மூன்று பொறுப்புகளையும், நானே கவனிப்பதால் மரணம் ஏற்பட்டால், எனக்கு தானே ஏற்படும். பரவாயில்லை...' என்றார் வினயன். அப்போது அந்த பாதிரியார், ஒரு சிலுவையை ஜெபித்து கொடுத்தார். படப்பிடிப்பும் தடையின்றி நடைபெற்றது. நாடு திரும்பிய சில தினங்களுக்கு பின், அந்த பாதிரியார் இறந்த செய்தி, வினயனை தேடி வந்தது.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us