sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விசேஷம் இது வித்தியாசம்: கிருஷ்ணரின் குடும்பம்!

/

விசேஷம் இது வித்தியாசம்: கிருஷ்ணரின் குடும்பம்!

விசேஷம் இது வித்தியாசம்: கிருஷ்ணரின் குடும்பம்!

விசேஷம் இது வித்தியாசம்: கிருஷ்ணரின் குடும்பம்!


PUBLISHED ON : ஆக 25, 2024

Google News

PUBLISHED ON : ஆக 25, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தன் குழந்தையை சான்றோன் என, உலகம் புகழும் போது தான், அவனைப் பெற்றவர்கள் பெருமை அடைகின்றனர்.

சாதாரண மனித பிறப்புக்கே இப்படி என்றால், தெய்வத்தையே தன் வயிற்றில் சுமந்த தாய், எவ்வளவு மகிழ்ந்திருப்பாள். அவள் தான் தேவகி; கண்ணனை பெற்றெடுத்த தாய்.

யது வம்சத்தை சேர்ந்த தேவகா என்பவருக்கு திரத தேவா, சாந்தி தேவா, உப தேவா, ஸ்ரீதேவா, தேவ ரக் ஷிதா, சகாதேவா, தேவகி என்ற ஏழு மகள்கள். இவர்களில், தேவகியை யாதவ இளவரசர் வசுதேவருக்கு மணம் முடித்து வைத்தனர்.

வசுதேவரின் மூத்த மனைவி ரோகிணி. இவளது பிள்ளைகள் தான், பலராமர் மற்றும் சுபத்ரா. ரோகிணியின் தங்கை தான், யசோதை.

கோகுலத்தில் வசித்த நந்தகோபரை திருமணம் செய்தவள். இவள் தான், கண்ணனையும், பலராமரையும் வளர்க்கும் பாக்கியம் பெற்றவள். இவள் பெற்ற மகளின் பெயர் யோகமாயை. இவள், கிருஷ்ணரின் குணங்களை பெற்றவள் என்பதால், நாராயணி என்றும் அழைக்கப்பட்டாள்.

முற்பிறப்புகளில், பார்வதி தேவியின் தந்தையான தட்சனின் மகளாகப் பிறந்தவள், தேவகி. தேவர்களின் தாயும், காஷ்யப முனிவரின் மனைவியுமாய் இருந்தவள். அதனால் தான் தெய்வப் பிள்ளையான கண்ணனையும் தன் வயிற்றில் சுமக்கும் பாக்கியம் இவளுக்கு கிடைத்தது.

கண்ணனுக்கு முன்னதாக கிர்த்திமட், சுஷேனன், உதாயின், பத்ரசேனன், ரிஜுதாசன், பத்ர தேகன் என, ஆறு ஆண் பிள்ளைகளைப் பெற்றாள், தேவகி. முற்பிறப்பில் இவர்கள், பிரகலாதனின் சித்தப்பா இரண்யாட்சனின் பேரன்களாகவும், இரண்யாட்சனின் மகன் காலநேமி என்பவரின் பிள்ளைகளாகவும் பிறந்தனர்.

இரண்யாட்சனை, வராக அவதாரம் எடுத்து கொன்று விட்டார், விஷ்ணு. இதன்பின், இவர்களை பெரியப்பா இரண்யகசிபு வளர்த்து வந்தார். இவர்கள், இரண்யகசிபுவின் அனுமதி பெறாமல், பிரம்மாவை நினைத்து தவமிருந்து சில வரங்களைப் பெற்றனர்.

இதனால், கோபமடைந்த இரண்யகசிபு, 'இவர்கள், மறு பிறப்பில், தங்கள் அசுர வம்சத்தில் பிறக்கும் கம்சனால் கொல்லப்படுவர்...' என, சாபம் கொடுத்து விட்டார். இதனால் தான், இவர்கள் தேவகியின் வயிற்றில் பிறந்ததும், கம்சனால் கொல்லப்பட்டனர்.

ஏழாவது பிள்ளை, பலராமன் கருவாக இருந்தபோதே, யோகமாயை மூலம், ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றி, இறந்து பிறந்ததாக, கம்சனிடம் சொல்லி விட்டனர். எட்டாவது பிள்ளையான கண்ணனால், கம்சனுக்கு அழிவு என்று இருந்தது. அவரையும் கம்சன் கொன்று விடுவான் என்ற பயத்தில், யசோதையின் வீட்டிற்கு இடம் மாற்றினர்.

கண்ணன், தன் தாய் தேவகியுடன் அருளும் கோவில், கோவா தலைநகர் பனாஜியிலிருந்து, 18 கி.மீ., துாரத்தில் உள்ள மார்செல் என்ற கிராமத்தில் உள்ளது.

தி.செல்லப்பா






      Dinamalar
      Follow us