/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: இவரது பெயர் வயிறுதாரி!
/
விசேஷம் இது வித்தியாசம்: இவரது பெயர் வயிறுதாரி!
PUBLISHED ON : ஆக 24, 2025

ஆக., 27 - விநாயகர் சதுர்த்தி
வயிறு... மனித உறுப்புகளில் மிக மிக முக்கியமானது. கை, கால்களால் சாவ்மளவு வேலை செய்தாலும் திருப்தி இருக்காது. இன்னும் கொஞ்சம் செய்திருக்கலாமோ என, தோன்றும். உள்ளுறுப்பான மூளைளய எவ்வளவு பயன்படுத்தினாலும், திருப்தி இருக்காது. இந்த வேலையை இன்னும் திருந்தச் செய்திருக்கலாமோ என, எண்ண வைக்கும்.
உடலின் எந்த உறுப்பும் திருப்தியடையாது அல்லது திருப்தியடைய வைக்காது. ஆனால், வயிறு மட்டும் தான் மனநிறைவைத் தரும்.
சிலர், 10 இட்லி சாப்பிடுவர், சிலர், மூன்றே இட்லியுடன் முடித்துக் கொள்வர். அவரவருக்கு எவ்வளவு உண்ண முடியுமோ, அந்த அளவுடன் திருப்தியடைந்து விடுவர்.
அறுசுவை உணவானாலும், போதுமான அளவே உண்ண முடியும். அவ்வாறு சாப்பிடுபவர், வயிறைத் தடவி, ஆகா வயிறு நிறைந்தது. மனமும் குளிர்ந்தது...' என்பார். ஆக, மனக்குவிர்ச்சிக்கு காரணமாக இருப்பதும் வயிறே. இதனால் தான் பெரிய வயிறுடன் காட்சி தருகிறார். விநாயகர், அவருக்கு, வயிறுதாரி என்ற பெயரும் இருக்கிறது.
தாரி என்றால், வண்டு எழுப்பும் ஒலி' எனப் பொருள். சிலருக்கு வயிறு காலியாக இருக்கும் போது, அதற்குள், 'உய்' என்ற ஒலி எழும். அது வண்டின் ரீங்கார சப்தம் போல் கேட்கும். வயிறுடன் சம்பந்தப்பட்டது. தாரி' என்ற சொல். இந்த சொல்லுக்கு, தாங்குதல் என்ற பொருளும் உண்டு.
இந்த பிரபஞ்சத்தை, அதாவது அனைத்து உலகங்களையும் தன் வயிற்றுக்குள் தாங்குபவர், விநாயகர், தன் வயிறு எப்படி நிறைந்துள்ளதோ, அவ்வாறே உலக உயிர்களின் மனதிற்கும் நிறைவைத் தருபவர். அவர்.
தாரி என்றால் சாப்பிடும் தட்டு என்றும் பொருள். மொத்தத்தில், தாரி என்ற சொல். வயிறை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உலகில் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக இருப்பது, வயிறு தான். அதன் அளவு ஒரு சாண் தான் என்றாலும், அது எது எதையோ கேட்கிறது. கேட்பதை எல்லாம் உள்ளுக்குள் வாங்கும் தொட்டியாகவும் இருக்கிறது.
அதை குப்பைத் தொட்டியாக்காமல் சாத்வீக உணவுகளை உண்டால், நீண்ட நெடிய காலத்துக்கு எல்லா உறுப்புகளும் நல்லபடியாக செயல்படும். உண்வைக் கட்டுப்படுத்தினால், மனமும் கட்டுப்படும்.
இதனால் தான், விநாயகருக்கு காது பிள்ளையார், மூக்கு பிள்ளையார் என்றெல்லாம் பெயர் வைக்காமல், முக்கிய உறுப்பான வயிறின் பெயரை வைத்திருக்கின்றனர்.
சரி... 'வயிறுதாரி பிள்ளையார்' என்ற பெயரில் எங்காவது விநாயகருக்கு சன்னிதி உள்ளதா என்றால், காஞ்சிபுரம், பஞ்சுப்பேட்டை ஓணகாந்தேஸ்வார் கோவிலில் இருக்கிறது. எல்லா செல்வமும் தந்து, மனநிறைவை அருளுபவர் என்ற பொருளில், 'வயிறுதாரி' எனப்படுகிறார்.
இந்தியாவில் மிகப்பெரிய வயிறை உடைய விநாயகர் சிலை, கர்நாடகாவிலுள்ள ஹம்பியில் உள்ளது. இவரை, கடலே க பிள்ளையார் என்கின்றனர். பெங்களூரு யஷ்வந்த்பூரிலிருந்து ரயில் ஹோஸ்பெட் சென்று, அங்கிருந்து. 1 கி.மீ., பயணித்தால், ஹம்பியை அடையலாம்.
விநாயகரின் வயிலும், மனமும் நிறைய. அவருக்கு மோதகம், அவல், பொரி படைத்து, அதை பிரசாதமாக ஏற்போம். வயினும் மனமும் குளிர வாழ்வோம்!
- தி. செல்லப்பா

