PUBLISHED ON : ஜூன் 16, 2019

அ நிறம் | அளவு
ஜப்பானில், பாரம் பரியமான குடைகளை, 'வகாசா' என்று அழைக்கின்றனர். இவை, காகிதத்தால் தயாரிக்கப்பட்டவை. காகிதத்தால் குடை எப்படி செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறதா... அது தான் உண்மை.
தடிமனான காகிதத்தை, ஒருவகை எண்ணெயில் ஊற வைத்து, பின், பல வகையான கண்கவர் வண்ணங்களை ஏற்றி, வகாசா குடைகளை
தயாரிக்கின்றனர். இதை, பிடித்துச் சென்றால், குடைக்குள்ளே தண்ணீர் கசியாது. அது தான் இதன் தனித்தன்மை.
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் காகிதம் மற்றும் மூங்கில் போன்றவற்றை வைத்து, இந்த குடைகளை தயாரிக்கின்றனர். நடன நிகழ்ச்சிகள், பாரம்பரிய தேநீர் அருந்தும் விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது, இக்குடைகளை பயன்படுத்துகின்றனர்.
— ஜோல்னாபையன்.
