sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

யோகா வல்லுனராக வேண்டுமா?

/

யோகா வல்லுனராக வேண்டுமா?

யோகா வல்லுனராக வேண்டுமா?

யோகா வல்லுனராக வேண்டுமா?


PUBLISHED ON : நவ 17, 2019

Google News

PUBLISHED ON : நவ 17, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவிலுக்குப் போனால், 'பணம் வேண்டும்; கடன் தீர வேண்டும்; கணவர், அன்பாக இருக்க வேண்டும்; நன்றாக படிக்க வேண்டும்...' என்ற வேண்டுதல்களே, அதிகமாக வைக்கப்படுகின்றன.

யோகாசனத்தில் வல்லுனராக வேண்டும் என்ற, வித்தியாசமான வேண்டுதலை வைக்க விரும்பினால், சிதம்பரம், அனந்தீஸ்வரர் கோவிலில் உள்ள, பதஞ்சலி முனிவரை தரிசிக்க வேண்டும்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த, மகா விஷ்ணுவை சுமந்து கொண்டிருப்பது, ஆதிசேஷன் என்னும் பாம்பு. ஒரு சமயம், வழக்கத்தை விட, சுவாமியின் எடை அதிகமாக தெரியவே, காரணம் கேட்டது, ஆதிசேஷன்.

சிவனின் நாட்டியத்தை, மனதில் நினைத்ததால், உண்டான ஆனந்தத்தில் எடை அதிகமானதாக தெரிவித்தார்.

தனக்கும், அந்த நடன காட்சியைக் காண ஆவலாக இருப்பதாக கூறியது, ஆதிசேஷன்.

'பூலோகத்தில் உள்ள, சிதம்பரம் சென்றால், அந்த தரிசனம் கிடைக்கும்...' எனக் கூறினார், பெருமாள்.

இதற்காக, அத்திரி மகரிஷி - அனுசூயா தம்பதியின் மகனாக, அவதரித்தது, ஆதிசேஷன். மகனுக்கு, 'பதஞ்சலி' என, பெயர் சூட்டினர். அவருக்கு, மனித தலையும், பாம்பு உடலும் அமைந்தது.

சிதம்பரத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதன் கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த, பதஞ்சலி, தனக்கு நடன காட்சியைக் காட்டும்படி வேண்டுதல் வைத்தார். பதஞ்சலிக்கு, அனந்தன் என்றும் பெயருண்டு. அந்த பெயரால் சிவலிங்கத்துக்கு, 'அனந்தீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.

இங்குள்ள அம்பாள், சவுந்தரநாயகி எனப்படுகிறாள்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில், இரவு, 10:00 மணிக்கு நடக்கும் அர்த்தஜாம பூஜை, விசேஷம். இதை, தினமும், அனைத்து மகரிஷிகளும் தரிசிப்பதாக ஐதீகம். இதே போல, உச்சிக்கால பூஜையில், அவர்கள், அனந்தீஸ்வரரை தரிசிப்பதாக சொல்வர். பதஞ்சலி மகரிஷிக்கு, இங்கு சன்னிதி உள்ளது.

பெருமாள், ராமாவதாரம் எடுத்தபோது, லட்சுமணராக அவதாரம் செய்தவர், பதஞ்சலி. இவரது நட்சத்திரம், பூசம் என்பதால், பூச நட்சத்திரத்தன்று, பதஞ்சலிக்கு, விசேஷ பூஜை நடக்கிறது. மார்கழி திருவாதிரையன்று, நடராஜருடன், பதஞ்சலியும் பவனி வருவார்.

யோக சூத்திரத்தை எழுதியவர், பதஞ்சலி என்பதால், யோகாசன கலையில் சிறப்பிடம் பெற விரும்புவோர், இவரை வணங்குவர். இக்கோவிலில் உள்ள துாண்களில், யோகாசன முறைகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.

சிவ தியானத்தில் இருப்பவர், சண்டிகேஸ்வரர். அவரிடம் வேண்டுதல் எதுவும் வைப்பதில்லை. ஆனால், இங்குள்ள, சண்டிகேஸ்வரரை, 'ராஜ சண்டிகேஸ்வரர்' என்பர். ராஜயோகம் பெற, இவரை வேண்டுவர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலின் பின்பக்கம், 1 கி.மீ., துாரம் சென்றால், அனந்தீஸ்வரர் கோவிலை அடையலாம்.

தி. செல்லப்பா






      Dinamalar
      Follow us