வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா?
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா?
PUBLISHED ON : ஏப் 20, 2014

குஜராத்திலுள்ள ஆனந்த் நகரில், மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால், ஒரு பெண்ணின் கர்ப்பப்பை வாடகைக்கு கிடைக்கும். வாடகை காலம், பத்து மாதங்கள். 1999ல், டாக்டர் நயனா பட்டேல் துவங்கி வைத்தது தான், 'வாடகை கர்ப்ப பாத்திரம்' என்ற மருத்துவமனை. குழந்தைகள் இல்லாத தம்பதியினர், இங்கு வந்து, வாடகை தாய் மூலம், குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். ஆனந்த் நகருக்கு, பக்கத்து கிராமங்களில் இருந்து, ஏராளமான பெண்கள், வாடகைத் தாயாக இருப்பதற்கு, முன் வருகின்றனர்.
ஒரு பெண், வாடகை தாயாக ஒப்பந்தம் செய்து கொண்டால், பிரசவம் முடியும் வரை, மருத்துவமனையிலேயே தங்கிவிட வேண்டும். பிரசவம் வரை, அவரை பூரண ஆரோக்கியத்துடன் பராமரிப்பது, டாக்டரின் கடமை.
அமெரிக்கா போன்ற நாடுகளில், இப்படி ஒரு குழந்தையை பெற்று எடுக்க, 70 லட்ச ரூபாய் செலவு ஆகிறது. ஆனால், இந்தியாவில் ஏழு லட்ச ரூபாய் இருந்தால் போதும். இதனால், பல நாடுகளில் இருந்து, குழந்தை இல்லாத ஏராளமான தம்பதியினர், குஜராத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.
-- ஜோல்னாபையன்.
