PUBLISHED ON : மே 07, 2023

உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து, பாலுடன் கலந்து பருகி வந்தால், ரத்த சோகை சரியாகி விடும்.
கறிவேப்பிலை இலைகள், 10 எடுத்து அரைத்து சாறு எடுத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால், வயிற்றுப்போக்கு உடனே சரியாகிவிடும்.
கறிவேப்பிலை, 10 இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும்.
ஒரு டம்ளர் நீரில் கொஞ்சம் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், எந்த வகையான அஜீரணம் இருந்தாலும் குணமாகும்; வாயுப் பிரச்னையும் தீரும்.
ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியில், தேன் கலந்து தினமும் சாப்பிட்டால், சளி வெளியேறி விடும்.
கறிவேப்பிலை, இஞ்சி அரைத்து கலக்கிய மோர் ஒரு டம்ளர் சாப்பிட்டால், நிறைய சாப்பிட்டு வயிறு திம்மென இருந்தாலும், செரிமானமாகி விடும்.
கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால், தலைமுடி கருகருவென்று வளரும்; நரைமுடி வரவே வராது.
கறிவேப்பிலை துவையலை சாப்பாட்டில் சேர்த்து வந்தால், வாய் நீர் ஊறல், வாய் கசப்பு, பித்தம் நீங்கி விடும்.
கறிவேப்பிலையை அப்படியே போடாமல், அரைத்து சமையலில் சேர்த்தால், முழு சத்தும் வீணாகாமல் நமக்கு கிடைக்கும்; சமையலும் மணம் துாக்கும்.
கறிவேப்பிலையை பொடி செய்து, சாதத்தில் போட்டு நல்லெண்ணை ஊற்றி சாப்பிட, உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும்.
சாப்பாட்டில் கறிவேப்பிலையை தனியே எடுத்து துாரப் போடாமல், மென்று சாப்பிட்டு சத்தைப் பெறுங்கள்.
தொகுப்பு: ஆர்.ஜெயலட்சுமி
