தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து - சுண்டைக்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து - சுண்டைக்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து - சுண்டைக்காய்!


PUBLISHED ON : ஜூன் 11, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடலிலுள்ள கிருமிகளை அழித்து, கொழுப்பை கரைக்கிறது, சுண்டைக்காய். வைட்டமின் ஏ, சி, இ ஆகிய சத்துக்களும், ஆரஞ்சு, கொய்யா, பப்பாளியில் இருப்பதை விட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமி, 'சி'யும் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக, 100 கிராம் சுண்டைக்காயில், இரும்பு சத்து - 22.5 மி.கி., கால்சியம் - 390 மி.கி., பாஸ்பரஸ் - 180 மி.கி., அடங்கியுள்ளது. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் பலப்படும்; பெண்களுக்கு நல்லது.

மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டைக்காய், குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குகிறது. குழந்தையிலேயே சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்க வேண்டும்.

சுண்டைக்காயை மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்படும். மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகிறது. வாய் புண், சொத்தைப் பல் உருவாவதையும் தடுக்கிறது.

காய்ச்சல் நேரத்தில், சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன், காயங்களையும், புண்களையும் ஆற வைக்கிறது. இதுதவிர, வாயுப் பிடிப்பு பிரச்னையையும் தீர்க்கிறது. புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டு வலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய், சிறந்த மருந்து.

ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புச் சளி, காசநோய் கோளாறு உள்ளவர்கள், தினமும், 20 சுண்டை வற்றலை சிறிது நல்லெண்ணையில் வறுத்து சாப்பிட்டு வந்தால், நோய் கட்டுப்படும்.

நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுப்பதுடன், பார்வைத் திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் செய்கிறது.

சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது, சுண்டைக்காய். கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகிறது. இதில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது.

பிரசவமான பெண்களுக்கு, பத்திய சாப்பாட்டின்போது கொடுக்கும், 'அங்காய பொடி'யில் முக்கியமானதாக, சுண்டைக்காய் இடம்பெறும்.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதுடன், செரிமான சக்தியைத் துாண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.

சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.

சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில், சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.

பி.எம்.ராம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us