தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து! - தேன் மற்றும் லவங்கம்!

நம்மிடமே இருக்கு மருந்து! - தேன் மற்றும் லவங்கம்!

நம்மிடமே இருக்கு மருந்து! - தேன் மற்றும் லவங்கம்!


PUBLISHED ON : ஜூலை 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆயுர்வேதத்தின் முக்கிய மருந்துகளாக இருப்பது, தேன் மற்றும் லவங்கம் தான். இதில், ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. இவை, நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன், மனதையும் அமைதிப்படுத்துகிறது.

தேனில், 'குளுக்கோஸ், ப்ருக்டோஸ்' மற்றும் கனிம சத்துக்கள் உள்ளன. அத்துடன், இரும்புச்சத்து, கால்ஷியம், பாஸ்பேட், குளோரின், பொட்டாஷியம், மக்னீஷியம், வைட்டமின், 'பி1, பி2, பி3, பி5' மற்றும் 'பி6' இருக்கிறது. இது, மிகச்சிறந்த, 'ஆன்ட்டி ஆக்சிடண்ட்!'

அதே போல, லவங்கத்திலும், 'ஆன்ட்டி ஆக்சிடண்ட்' நிறைந்திருக்கிறது. வைட்டமின், 'ஏ, இ, டி' மற்றும் 'கே' இருக்கிறது. இவை, இரண்டையும் சேர்த்து எடுத்துக் கொள்வதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் லவங்க பொடி சேர்த்து நன்றாக கலக்கி, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்; லவங்க பொடி மற்றும் தேன் கலந்து, குழைத்தும் சாப்பிடலாம்.

தேன் மற்றும் லவங்க பொடி இரண்டையும் கலந்து, ரொட்டியில், 'ஜாம்'முக்கு பதில் தடவி உண்பதால், கொழுப்பு குறையும். இதய தமனிகளில் இருக்கும் கொழுப்பை குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு வந்தவர்களும், இதை சாப்பிடலாம்.

வயதாக ஆக, இதயத்தின் தசைகள் வலுவிழந்து போகும். தேனும், லவங்கமும் இதய தசைகளை வலுப்பெற உதவுகின்றன.

மூட்டு நோய் உள்ளோர், காலை, மாலை இருவேளையும், ஒரு டம்ளர் சூடான நீரில், இரண்டு டீஸ்பூன் தேனும், சிறிய ஸ்பூன் லவங்க பொடியும் கலந்து சாப்பிட, குணமாகும்.

ஒரு கப் தண்ணீருடன், இரண்டு ஸ்பூன் தேன், மூன்று டீஸ்பூன் லவங்க பொடி சேர்த்து சாப்பிட, கொழுப்பு குறையும். தொடர்ந்து சாப்பிட, நல்ல பலன் தெரியும். தினமும் உணவுடன், சுத்தமான தேன் சாப்பிட, கொழுப்பு மூலம் வரும் தொந்தரவுகள் குறையும்.

ஒரு மேஜைக் கரண்டி தேனை, வெதுவெதுப்பான சுடு நீரில் கலந்து, அதனுடன் லவங்க பொடியை சேர்த்து, மூன்று நாள் சாப்பிட, கடுமையான ஜலதோஷம், இருமல் மற்றும் 'சைனஸ்' தொல்லைகள் மறையும்.

வயிற்று வலி, வயிற்றுப் புண்ணுக்கு, தேனும், லவங்க பொடியும் மிகச்சிறந்த மருந்து.

தினசரி தேனையும், லவங்க பொடியையும் சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நம் உடலை, வைரஸ் தாக்குதலில் இருந்தும் காக்கும்.

செரிக்க கடினமான உணவு சாப்பிட்டவுடன், லவங்க பொடி மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால், எளிதில் ஜீரணமாகும்; 'அசிடிட்டி' இருப்பவர்களும் இதை சாப்பிடலாம்.

ஒரு ஸ்பூன் லவங்க பொடியை, ஒரு டம்பளர் நீரில் போட்டு கொதிக்க விடவும். அதனுடன், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து குடித்தால், சருமத்தை இளமையாகவும், மிருதுவாகவும் வைப்பதுடன், முகத்தில் சுருக்கங்கள் வருவதை தடுக்கும்.

மூன்று ஸ்பூன் தேனுடன், ஒரு டீஸ்பூன் லவங்க பொடியை குழைத்து, முகப் பருக்களின் மேல் பூசி, 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இவ்வாறு தினமும் செய்து வந்தால், பருக்கள் மற்றும் தழும்புகள் மறைந்து விடும்.

வயதானவர்கள், தேன் மற்றும் லவங்க பொடி இரண்டையும் சம அளவில் சாப்பிடுவதால், உடலாலும், மனதாலும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பர்.

முடி உதிர்வு மற்றும் வழுக்கை தலை உள்ளோர், சிறிதளவு ஆலிவ் ஆயில், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் லவங்க பொடி சேர்த்து குழைத்து கொள்ள வேண்டும். குளிப்பதற்கு, 15 நிமிடம் முன் தலைக்கு தேய்த்து, பிறகு வெது வெதுப்பான நீரில் குளித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

சர்க்கரை நோய்களுக்கு, தேன் மற்றும் லவங்கம் மிகவும் நல்லது. லவங்கத்தில் இருக்கக்கூடிய தாதுக்கள், 'இன்சுலின்' சுரப்பை துரிதப்படுத்தும். இதனால், உடலில், 'குளுக்கோஸ்' அளவு சீராக இருக்க உதவும்.

- கவிதா பாலாஜிகணேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us