தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து! - வாழைப்பூ

நம்மிடமே இருக்கு மருந்து! - வாழைப்பூ

நம்மிடமே இருக்கு மருந்து! - வாழைப்பூ


PUBLISHED ON : நவ 24, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 24, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழைப் பூவில் துவர்ப்பு சத்து அதிகம் உள்ளது. அதை சாப்பிடுவதால், வைட்டமின், 'பி' கிடைக்கிறது. துவர்ப்பு சத்துகளால் பல வியாதிகள் குணமாகும்.

வாழைப் பூவை, வாரம் இருமுறை சமைத்து சாப்பிடுவதால், ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

மேலும், ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளை கரைத்து, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால், ரத்தத்தில் ஆக்சிஜன் வாயு அதிகரிக்கிறது.

உடலுக்கு தேவையான இரும்பு சத்தை கொடுக்கிறது. ரத்த அழுத்தம், ரத்த சோகை ஏற்படாமலும் தடுக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரை பொருளை கரைத்து வெளியேற்ற, வாழைப்பூ உதவுகிறது. இதனால், ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வாழைப் பூவை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகமாகும்.

மூல நோயால் பாதித்தோர், மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள் மூலம், வெளி மூலம், இவற்றுக்கு சிறந்த மருந்தாக, வாழைப்பூ பயன்படுகிறது.

மலச்சிக்கலை போக்கும், சீதபேதியை கட்டுப்படுத்தும், வாய் புண்ணை விரைவில் ஆற்றும் தன்மை உடையது.

வாழைப் பூவை தினமும் உணவில் சேர்த்து வந்தால், பெண்களுக்கு உண்டாகும் கருப்பை கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப் போக்கு அல்லது ரத்தப் போக்கின்மை மற்றும் வெள்ளை படுதல் போன்றவை விரைவில் குணமாகும்.

தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us