தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து! - ஏலக்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து! - ஏலக்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து! - ஏலக்காய்!


PUBLISHED ON : செப் 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நெஞ்சில் சளி கட்டி, மூச்சு விட சிரமப் படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி, வயிற்று வலி வந்தவர்களும், ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, தொடர் இருமல் குறையும்.

* 'பசியே இல்லை, சாப்பிட பிடிக்கவில்லை...' என்று கூறுவோர், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும்; ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்

* வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும், ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்னை தான் காரணம். எனவே, வாய் துர்நாற்றத்தை போக்க, ஏலக்காயை மென்று சாப்பிடலாம். சாப்பிடும் உணவு வகைகளில், சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது; அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

* ஏலக்காயில் உள்ள, 'வாலட்டைல்' என்ற எண்ணெய் தான், நறுமணத்தை தந்து, நோய்களை குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள, கார குணம், வயிற்றுப் பொருமலை குணமாக்கி, எளிதில் செரிமானம் ஆக துாண்டுகிறது.

* ஏலக்காயை, தேநீர் மற்றும் பாயசத்தில் சேர்த்து பருகினால், மன இறுக்கம், படபடப்பு முதலியவற்றை அகற்றி, உடனடியாக புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே, காலை வேளையில், தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது

* ஏலக்காய் மற்றும் லவங்கம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால், தொண்டைக்கு இதமாக இருக்கும்

* நெல்லிக்காய் சாறில், ஒரு சிட்டிகை ஏலக்காய் துாளை சேர்த்து, தினம் மூன்று வேளை பருகி வந்தால், சிறுநீர்ப்பை சுழற்சியும், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்

* அடிக்கடி விக்கல் எடுத்தால், ஒரு கப் தண்ணீரில், இரண்டு, மூன்று ஏலக்காயை தட்டி போட்டு, இதனுடன், ஐந்து அல்லது ஆறு, புதினா இலை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு, அதை வடிகட்டி அருந்தினால், விக்கல் எடுப்பது குறையும்.

- பொ.பாலாஜி கணேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us