PUBLISHED ON : மார் 05, 2023

'ஸ்ட்ராபெரி பெண்ணே...' என்ற பாடலில் இடம்பெற்ற, ஸ்ட்ராபெரி பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றிய சிறிய தொகுப்பு தான் இது:
செம்புற்றுப் பழங்கள் எனப்படும், இந்த சாறு நிறைந்த, கவர்ச்சியான அடர்சிகப்பு நிறம் நிறைந்த இந்த பழம், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தது.
இதில் வைட்டமின், சி, ஏ மற்றும் கே, தையமின், ரிபோப்ளேவின், நியாசின், பான்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், மாங்கனீஸ், அயோடின், பாஸ்பரஸ், துத்தநாகம், செலினியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்களும் அதிகம் நிறைந்துள்ளன.
* இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்; இன்றைய இளைய தலைமுறையினர் அனைவருக்கும் உள்ள தலைமுடி பிரச்னை, ஒரு முடிவுக்கு வரும்
* பார்வை திறனை அதிகரித்து, பிற்காலத்தில் கண் மங்குதலை முற்றிலும் தடுக்கும்
* வயது முதிர்ச்சியால், இருபாலருக்கும் தோலில் சுருக்கம் ஏற்படும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோலிலுள்ள செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, பளபளக்கும் சருமத்தை தரும்
* பற்களில் இருக்கும் கறையை நீக்கும்
* இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்கும்
* எலும்பு தேய்மானம் வராது
* சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதில் ஏற்படும் அசதி மற்றும் சத்து குறைவை தீர்க்கும்
* உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாத்து, உடல் எடையை குறைக்க உதவும்
* புற்றுநோய் எதிர்பாற்றலை அதிகரித்து, அந்நோய் வராமல் தடுக்கும்.
நளினி ராமசந்திரன்
