/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்!
/
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்!
PUBLISHED ON : செப் 04, 2022

மருத்துவ குணம் நிறைந்தது, விளாம்பழம். இதன் மரம், இலைகளிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன
* தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தை கொடுத்து வந்தால், அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும், விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால், பல் மற்றும் எலும்புகளை வலுவடையச் செய்கிறது
* வறட்டு இருமல், வாய் கசப்பு குணமாக, விளா மரத்தின் மரப்பட்டையை பொடியாக்கி கொதிக்க வைத்து, வடி கட்டி குடிக்கலாம்
* விளாம் பழத்தின் சதைப் பகுதியை தனியே எடுத்து காய வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சம அளவு கஸ்துாரி மஞ்சள், பார்லி, பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து, சோப்புக்கு பதிலாக குளிக்கும்போது பயன்படுத்தலாம். இதனால், தோல் மிருதுவாவதுடன், கரும்புள்ளிகள் மறையும்
*நரம்புத் தளர்ச்சி குணமாக, விளாம்பழத்தை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும்
*தயிருடன் விளாங்காயை சேர்த்து பச்சடி போல் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாகும்
*தினமும் ஒரு விளாம்பழம் என, 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பித்தக் கோளாறுகள் சரியாகும் மற்றும் உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
* விளா மரத்தின் இலை, முடி கொட்டும் பிரச்னைக்கும் தீர்வு அளிக்கிறது.
அடர்த்தியான தலை முடி: விளா மரத்தின் இலை, செம்பருத்தி இலை - தலா ஐந்து, கொட்டை நீக்கிய பூந்தித் தோல் - நான்கு எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். இதேபோல் தொடர்ந்து செய்து வந்தால், தலை முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.
— ஏ. எஸ். கோவிந்தராஜன்.