/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கேக் கொண்டு தயாரிக்கப்பட்ட திருமண உடை!
/
கேக் கொண்டு தயாரிக்கப்பட்ட திருமண உடை!
PUBLISHED ON : மார் 24, 2013

பிரிட்டனின் பிரபலமான உடை வடிவமைப்பாளர், டோனா. புதுமையான முறையில் உடைகளை வடிவமைத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதில் வல்லவர். அதிலும், பெண்களுக்கான திருமண உடையை வடிவமைப்பதில், ஸ்பெஷலிஸ்ட்.
சமீபத்தில், 25 கிலோ எடையுள்ள, கேக்கிலேயே, திருமண உடையை வடிவமைத்து அசத்தியுள்ளார். ஐஸ்கிரீம், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கேக் உடை, பர்மிங்காமில் உள்ள, அரங்கில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட முத்துக்கள், இந்த உடைகளுக்கு சிறப்பு சேர்க்கின்றன. இந்த கேக்கை, 2,000 பேர் சாப்பிட முடியும். இந்த உடையை பார்ப்பதற்கு, பிரிட்டன் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த திருமண உடையை, பொம்மைகளுக்கு மட்டுமே அணிவித்து, அழகு பார்க்க முடியும். உயிருள்ள பெண்களுக்கு அணிவிக்க முடியாது.
— ஜோல்னா பையன்.