தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மாதம் மும்மாரின்னா என்ன?

மாதம் மும்மாரின்னா என்ன?

மாதம் மும்மாரின்னா என்ன?


PUBLISHED ON : ஏப் 22, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்த காலத்தில் ராஜா, மந்திரியைப் பார்த்து, 'மாதம் மும்மாரி பெய்கிறதா மந்திரி?' என்று கேட்பாராம். 'ஆம் மகாராஜா!' என்று பதில் சொல்வாராம் மந்திரி. 'ராஜா என்றால் அரண்மனையை விட்டு வெளியே போவதே இல்லையா? மழை பெய்வதும், வெயில் காய்வதும் கூட தெரியாமல் ஒரு ராஜாவா?' என்று கேட்காதீர்கள்; அது அந்தக் காலம்.

மாதம் ¬மும்மாரி என்பது என்ன கணக்கு என்றால், வேதம் ஓதும் வேதியற்கொரு மழை, நீதி வழுவா செங்கோலுக்கொரு மழை, பத்தினிப் பெண்களுக்கொரு மழை என்றனர். வேதாத்யானம் ஒழுங்காக செய்து வருவதால், சந்தோஷப்பட்டு ஒரு மழை பெய்யச் செய்வார் வருண பகவான்.

நீதி தவறாமல் அரசன் ஆட்சி செய்தால் சந்தோஷப்பட்டு, ஒரு மழை பெய்யச் செய்வர் தேவதைகள். தன் கடமை களை ஒழுங்காகச் செய்து, கணவனை பேணி பாதுகாத்து, குடும்பத்தையும், சிறப்பான ¬முறையில் நடத்தி வரும் பத்தினிப் பெண்களுக்காக ஒரு மழை பெய்யுமாம்.

அதனால்தான், வேதம் ஓதுபவர்களுக்கு தனிப் பெருமை. வேதம் ஓதுபவர்களுக்காகவே, அரசாங்கம் சில சவுகரியங்களைச் செய்து கொடுத்தது. அரசனும் நீதி வழுவாமல் ராஜ்யபாரம் செய்து, யாருக்கும் எந்தத் துன்பமும் வராமல் பாதுகாத்து, ஆராய்ச்சி மணி கட்டி, குடி மக்களின் குறைகளை அறிந்து, அதைப் போக்கி, நாடு நலமாக இருக்க ஏற்பாடு செய்து கொடுத்தான்; அதற்காக ஒரு மழை.

நாட்டில் மரியாதைக்குரியவர்கள் பத்தினிப் பெண்கள். குடும்பத்தை நல்வழியில் நடத்திச் செல்வர். 'பத்தினிப் பெண்கள் பெய்யன பெய்யும் மழை...' என்றுள்ளது.

— இம்மூன்று காரணங்களாலும் மாதம் ¬மும்மாரி பெய்ததாகச் சொல்வர்.

ஆனால், காலம் மாற மாற, ராஜா இல்லாமல் போய் விட்டது. மந்திரிகள் மட்டும் நிறைய பேர் இருக்கின்றனர். பத்தினிப் பெண்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று கணக்கெடுக்க ¬முடியவில்லை. விவாகமும் நடக்கிறது; விவாகரத்தும் நடக்கிறது.

கணவனும், மனைவியும், விவாகரத்து கோர்ட்டுகளில் போய் நிற்கின்றனர். இப்படி சாஸ்திரத்துக்கு விரோதமாக எல்லாமே இருந்தால், மாதம் ¬மும்மாரி எப்படி பெய்யும்? 'நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை...' என்றபடி, இப்போதும் மழை பெய்கிறது. ஆனால், மாதம் ¬மும்மாரி என்ற கணக்கு கிடையாது; பெ#வதும், பெ#யாததும் மழையின் இஷ்டம்!

***

ஆன்மிக வினா-விடை!

குத்து விளக்கை, எந்தெந்த நாட்களில் துலக்கலாம்?

ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை பகல் பொழுது, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை துலக்கலாம். மற்ற நாட்களில், குத்து விளக்கில் குபேர தனலட்சுமி குடியேறுவதாக ஐதீகம். ஆகையால், அந்த நாட்களில், குத்து விளக்கை துலக்குவதை தவிர்க் கவும்.

***

வைரம் ராஜகோபால்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us