கைகள் இல்லா விட்டால் என்ன... தன்னம்பிக்கை இருக்கிறதே!
கைகள் இல்லா விட்டால் என்ன... தன்னம்பிக்கை இருக்கிறதே!
PUBLISHED ON : ஜூன் 11, 2017

அ நிறம் | அளவு
படத்தில் இருக்கும் இளம் பெண்ணின் பெயர், ஜிலுமோள் மரியட் தாமஸ்; பிறக்கும் போதே, இரு கைகளும் இன்றி பிறந்த இவரை, கொல்ல மனமின்றி, செல்லமாக வளர்த்தார், இவரது தாய்.
மூத்த இரு சகோதரிகளுடன் வளர்ந்து வரும் போது, இவரது நான்கு வயதில், ரத்தப் புற்றுநோயால், தாய் இறந்து விட, கன்னிகாஸ்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டாள், ஜிலுமோள்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள, தொடுபுழா பள்ளியில் கல்வி பயின்றவள், பிளஸ் 2வில், 'அனிமேஷன்' படிப்பில் தேர்ச்சியடைந்து, அனைவரையும் வியக்க வைத்தாள்.
தலைவர்களின் படங்களை, கம்ப்யூட்டரில் அற்புதமாக வரைந்து, சாதனை படைத்த, ஜிலுமோள், தற்போது, எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள, 'டிசைன்' நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பஸ்சில் பயணக்கும் போது கூட, யார் உதவியும் இன்றியே பயணிக்கிறார்.
— ஜோல்னாபையன்.
