PUBLISHED ON : மே 27, 2018

அ நிறம் | அளவு
ராணுவ அதிகாரியின் மகள் டிபானி; பிறந்த ஆறு மாதத்திலே, பார்வையை இழந்து விட்டார். தந்தை, நாடு முழுவதும் பணி மாற்றம் செய்யப்பட்டதால், வேறு வேறு பள்ளிகளில் படித்து, இறுதியில், திருவனந்தபுரம் மகளிர் கல்லுாரியில் பட்டம் பெற்றார், டிபானி. 14 வயது வரை, தாயார் இருந்ததால், சிரமமின்றி வாழ்ந்தார். தற்போது, திருவனந்தபுரத்திலேயே தங்கி, கண் பார்வையற்றோர் பள்ளி ஒன்றை ஆரம்பித்து, மிகவும் சிரமப்பட்டு நடத்தி வருகிறார். பார்வையற்றவர் என்று முடங்கிக் கிடக்காமல், பிறருக்கு உதவுவதை, தன் வாழ்வின், லட்சியமாக கொண்டுள்ளார்.
— ஜோல்னாபையன்.
